சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள வீடுகள், அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் மழைநீர் சேகரிப்பு பணிகள் மேற்கொள்வது குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை ரிப்பன் மாளிகையில் ஆணையர் பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது.
இதில், 2 லட்சம் கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு வசதிகள் செய்து முடிப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இதுவரை சுமார் 53,847 கட்டிடங்களில் மழை நீர் சேகரிப்பு வசதிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளது. அரசுக் கட்டிடங்கள், தனியார் கட்டிடங்கள், நீர் ஆதாரங்களை மேம்படுத்துதல், ஏற்கனவே ஏற்படுத்தப்பட்ட மழைநீர் சேகரிப்பு உள்ள பகுதிகளை புனரமைத்தல் உள்ளிட்ட பணிகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. 2 லட்சம் மழைநீர் சேகரிப்பு மையங்கள் அமைக்க 200 அலுவலர்கள் கொண்ட குழு வார்டுகள் வாரியாக அமர்த்தப்பட்டு பணிகள் நடப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.