ஆவடியை அடுத்த திருநின்றவூர், பாக்கம் சம்பந்தம் நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் அருள் லூயிஸ் ஆண்ட்ரூஸ் (45), சென்னை குடிநீர் வாரியத்தில் அலுவலராகப் பணியாற்றிவந்தார். கடந்தாண்டு நிர்வாகக் காரணங்களுக்காக துறை ரீதியாக, இவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து இவரை சென்னை வளசரவாக்கத்திலிருந்து திருவொற்றியூருக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இடமாற்றம்செய்யப்பட்டு ஓராண்டு முடிந்த நிலையில், தன்னை மீண்டும் பழைய இடத்துக்கு பணியிடமாற்றம் செய்ய வேண்டும் என அலுவலர்களிடம் முறையிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அலுவலர்கள் உங்கள் மீதான விசாரணை இன்னும் முடியவில்லை எனக் கூறிவந்துள்ளனர்.
இதில் மிகுந்த மன உளைச்சலான அவர் கடந்த 21ஆம் தேதி வீட்டில் பூச்சி மருந்து குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனையடுத்து உறவினர்கள் அவரை மீட்டு திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டுவந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இது குறித்து திருநின்றவூர் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: குரூப் 4 தேர்வு முறைகோடு தொடர்பான வழக்கில் சிபிஐ-க்கு நோட்டீஸ்