ETV Bharat / state

பயங்கரவாதிகள் சதித்திட்டம்: தமிழ்நாடு காவல்துறைக்கு கர்நாடகா எச்சரிக்கை! - கர்நாடகா டிஜிபி

சென்னை: தமிழகத்தில் ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக தமிழ்நாடு காவல்துறைக்கு கர்நாடக காவல்துறை எச்சரிக்கை கடிதம் அனுப்பியுள்ளது.

எச்சரிக்கை கடித
author img

By

Published : Apr 26, 2019, 11:48 PM IST

இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று தேவாலயம், நட்சத்திர ஹோட்டலில் வெடிகுண்டு தாக்குதல் நடந்ததை அடுத்து தமிழகத்தில் பல இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழக்தில் முக்கிய இடங்களான ரயில் நிலையம், விமான நிலையம், மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கர்நாடகா மாநில காவல்துறைத் தலைவர் நீலமணி என் ராஜூ தமிழக காவல்துறைக்கு எழுதியுள்ள கடிதத்தில், “தமிழ்நாடு - கர்நாடகா எல்லைப் பகுதியான ஓசூர் அருகே சுவாமி சுந்தர மூர்த்தி என்பவர் லாரி ஓட்டி வந்தபோது கிடைத்த ரகசிய தகவலை எங்களிடம் கூறினார். அதன்படி, தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தெலுங்கானா, கோவா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களின் ரயில் நிலையங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாகவும், மேலும் தமிழ்நாட்டின் ராமநாதபுரத்தில் 19 பயங்கரவாதிகளின் ஊடுருவல் இருப்பதாகவும் கூறினார்.

ஆகவே, தமிழ்நாட்டின் முக்கிய இடங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்புகள் இருக்கிறது” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் ரயில் உள்ளிட்ட இடங்களில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக பெங்களூரு போலீஸ் தரப்பில் இருந்து தமிழக போலீசாருக்கு எச்சரிக்கை கடிதம்...!*
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.