சென்னை : ஜெர்மனியில் இருந்து சென்னை திரும்பிய செஸ் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவிற்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் கடந்த வாரம் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில், தமிழகத்தை சேர்ந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தா 2வது இடம் பிடித்தார். ஏறத்தாழ 21 ஆண்டுகளுக்கு பின் உலக செஸ் சாம்பியப்ன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு சென்ற வீரர் என்ற சிறப்பையும் பிரக்ஞானந்தா பெற்றார்.
நார்வே வீரர் கார்ல்சனுக்கு கடும் நெருக்கடி கொடுத்த பிரக்ஞானந்தா இரண்டாவது இடம் பிடித்தார். இந்நிலையில், அங்கிருந்து ஜெர்மனியில் நடைபெற்ற செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் பிரக்ஞானந்தா கலந்து கொண்டார். தொடர்ந்து இன்று (ஆகஸ்ட். 30) சென்னை விமான நிலையம் வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
#WATCH | Tamil Nadu | "It feels really great. I think it is good for Chess," says Indian chess grandmaster and 2023 FIDE World Cup runner-up R Praggnanandhaa, as his schoolmates, All India Chess Federation representatives and State Government representatives receive him at… pic.twitter.com/s2TpHCR7tz
— ANI (@ANI) August 30, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#WATCH | Tamil Nadu | "It feels really great. I think it is good for Chess," says Indian chess grandmaster and 2023 FIDE World Cup runner-up R Praggnanandhaa, as his schoolmates, All India Chess Federation representatives and State Government representatives receive him at… pic.twitter.com/s2TpHCR7tz
— ANI (@ANI) August 30, 2023#WATCH | Tamil Nadu | "It feels really great. I think it is good for Chess," says Indian chess grandmaster and 2023 FIDE World Cup runner-up R Praggnanandhaa, as his schoolmates, All India Chess Federation representatives and State Government representatives receive him at… pic.twitter.com/s2TpHCR7tz
— ANI (@ANI) August 30, 2023
அரசு தரப்பில் பூங்கொத்து கொடுத்து பிரக்ஞானந்தாவிற்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது. தொடர்ந்து பிரக்ஞானந்தாவை வரவேற்க திரண்ட நூற்றுக்கணக்கான மக்கள் வாழ்த்து கோஷங்களை எழுப்பினர். திறந்தவெளி வாகனம் மூலம் நேரு விளையாட்டு அரங்கிற்கு அழைத்துச் செல்லப்பட உள்ள செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு அரசு தரப்பில் தேநீர் விருந்து அளிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, பிரக்ஞானந்தா சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இரண்டாவது இடம் பிடித்த நிலையில், அரசு தரப்பில் பிரக்ஞானந்தாவிற்கு 30 லட்ச ரூபாய் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டு உள்ளது. திறந்து வெளி வாகனம் மூலம் நேரு விளையாட்டு அரங்கிற்கு அழைத்துச் செல்லப்படும் பிரக்ஞானந்தாவிற்கு பொது மக்கள் மலர் தூவி வரவேற்பு அளித்தனர்.
-
#WATCH | After returning to Chennai, R Praggnanandhaa says, "I am very happy to see so many people coming here and it is good for Chess." https://t.co/4kqysfzPvw pic.twitter.com/u4BMY2mysr
— ANI (@ANI) August 30, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#WATCH | After returning to Chennai, R Praggnanandhaa says, "I am very happy to see so many people coming here and it is good for Chess." https://t.co/4kqysfzPvw pic.twitter.com/u4BMY2mysr
— ANI (@ANI) August 30, 2023#WATCH | After returning to Chennai, R Praggnanandhaa says, "I am very happy to see so many people coming here and it is good for Chess." https://t.co/4kqysfzPvw pic.twitter.com/u4BMY2mysr
— ANI (@ANI) August 30, 2023
தொடர்ந்து முதலமைச்சர் வீட்டில் அவரை பிரக்ஞானந்தா சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த சந்திப்பின் போது தமிழக செஸ் வீரர் பிரக்ஞானந்தாவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரிசுப் பொருட்கள் மற்றும் 30 லட்ச ரூபாய்க்கான காசோலையை வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த சந்திப்பை தொடர்ந்து ஆசிய கோப்பை விளையாட்டு தொடருக்கான பயிற்சியில் கலந்து கொள்ள இன்று இரவு கொல்கத்தா செல்ல திட்டமிட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க : லெக்ராஞ்சியன் புள்ளியை இஸ்ரோ தேர்வு செய்தது ஏன்?- அதித்யா எல்-1 என்றால் என்ன? - விளக்குகிறார் விஞ்ஞானி எபிநேசர் செல்லச்சாமி!