ETV Bharat / state

'வி.பி.ராமன் சாலை' - பெயர் பலகையை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்! - யார் இந்த விபி ராமன்

மறைந்த முன்னாள் இந்திய கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் வி.பி. ராமன் வசித்து வந்த லாயிட்ஸ் கார்னர் இல்லம் அமைந்துள்ள சாலைக்கு "வி.பி. இராமன் சாலை" என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த சாலையின் புதிய பெயர் பலகையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.

VP Raman
பெயர்
author img

By

Published : Apr 25, 2023, 1:23 PM IST

சென்னை: மறைந்த முன்னாள் இந்திய கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் வி.பி. ராமன், மத்திய அரசின் சட்ட அலுவலராக நியமிக்கப்பட்ட முதல் தென்னிந்தியர் என்ற பெருமைக்குரியவர். தமிழ்நாடு அரசின் அட்வகேட் ஜெனரலாகவும், இந்திய வழக்கறிஞர் கழகத்தின் முன்னணி உறுப்பினராகவும் இருந்தார். சட்டக் கல்லூரியில் துணைப் பேராசிரியராகவும் பணிபுரிந்தார்.

பேரறிஞர் அண்ணாவின் கொள்கையில் பெரிதும் ஈர்க்கப்பட்டு திராவிட இயக்கத்தில் இணைந்து செயல்பட்டார். பேரறிஞர் அண்ணாவின் ஆங்கில இதழான ஹோம் லேண்ட் இதழின் துணை ஆசிரியராகவும் இருந்தார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் சமகால தலைவர்களின் பேரன்பையும் நன்மதிப்பையும் பெற்றவராகவும் திகழ்ந்தார். வி.பி. ராமன், கல்வி மட்டுமின்றி, கர்நாடக இசை, ஆங்கில இலக்கியம், கிரிக்கெட் என்று பன்முகத்திறன் கொண்டவராகவும் விளங்கினார்.

வி.பி. ராமனுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில், மெரினா கடற்கரை காமராஜர் சாலை முதல் இந்தியன் வங்கி தலைமை அலுவலகம் வரை கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி செல்லக்கூடிய அவ்வை சண்முகம் சாலையை "வி.பி. இராமன் சாலை" என தமிழ்நாடு அரசு பெயர் மாற்றம் செய்துள்ளது. வி.பி. ராமன் வாழ்ந்த லாயிட்ஸ் கார்னர் இல்லமும் இந்த சாலைப் பகுதியிலே அமைந்துள்ளது.

  • பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் முன்னாள் இந்திய கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் வி.பி.இராமன் அவர்கள் வசித்து வந்த லாயிட்ஸ் கார்னர் என பெயரிடப்பட்ட வீடு அமைந்துள்ள பகுதியான மெரினா கடற்கரை காமராஜர் சாலை முதல் இந்தியன் வங்கி தலைமை அலுவலகம் வரையுள்ள சாலை பகுதிக்கு, “வி.பி. இராமன் சாலை”… pic.twitter.com/xzBUQUmlI1

    — CMOTamilNadu (@CMOTamilnadu) April 25, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (ஏப்.25) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பெயர் மாற்றம் செய்யப்பட்ட "வி.பி. இராமன் சாலை" -யின் புதிய பெயர் பலகையை காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, தலைமைச் செயலாளர் இறையன்பு, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, அரசு உயர் அலுவலர்கள் மற்றும் வி.பி. ராமனின் மகன்கள் வழக்கறிஞர் பி.எஸ். ராமன், பி.வி.மோகன் ராமன், பி.ஆர். ராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: HSC Result: 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட் தேதி மாற்றம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.