ETV Bharat / state

'யாருடைய தயவிலும் பாஜக வளர அவசியமில்லை' - அதிமுக மூத்த தலைவருக்கு பதிலடி கொடுத்த பாஜக! - கச்சத்தீவை கருணாநிதி தாரை வார்த்ததற்கு முக ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்

பாஜகவுக்கு எதிராக அதிமுக போராட வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் கூறிய நிலையில், இதற்கு பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி. துரைசாமி பதிலடி கொடுத்துள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநில துணைத் தலைவர் விபி துரைசாமி

author img

By

Published : Jun 2, 2022, 8:23 PM IST

சென்னை: பாஜக மாநிலத் துணைத் தலைவர் வி.பி. துரைசாமி தி.நகரில் உள்ள அவரது வீட்டில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அதிமுக அமைப்பு செயலாளர் பொன்னையன் தேவையில்லாமல் கருத்துகளை தெரிவித்துள்ளார். காவேரி, முல்லை, மேகதாது பிரச்சினையில் தமிழர்களுக்காக ஏதும் செய்யவில்லை என கூறியதை வன்மையாக கண்டிக்கிறேன். தேசிய கல்வி கொள்கையில் பாஜக 1 முதல் 6ஆம் வகுப்பு வரை தமிழ் வழி கல்வியில் பயில வழிவகை செய்துள்ளது; ஹிந்தியை திணிக்கவில்லை.

அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையனுக்கு ராஜ்யசபா சீட் கிடைக்கவில்லை என்பதற்காக பாஜகவை இப்படி பேசுகிறார். தமிழ்நாடு பாஜக மக்கள் பிரச்சினைகளை தினமும் பேசுகிறது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியாக இல்லை. தினமும் கொலை, கொள்ளை நடைபெறுகிறது. அதிமுக பாஜக கூட்டணியில் இது ஒரு நிலையில் அதிமுக மூத்த தலைவர் ஒருவர் இவ்வாறு பேசியிருப்பது குறித்து அக்கட்சி அவரிடம் விளக்கம் கேட்க வேண்டும்.

அதிமுக 65 சட்டப்பேரவை உறுப்பினர் வைத்துகொண்டு எதிர்கட்சியாக சரியாக செயல்பட வில்லை. ஆனால், பாஜக நான்கு சட்டப்பேரவை உறுப்பினர் வைத்துகொண்டு எதிர்கட்சியாக அனைத்து கேள்விகளும் முன் வைக்கிறது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு, மின்சாரத்துறையின் ஊழல், பிறத்துறையில் நடைபெறும் ஊழல் குறித்து கேள்வி எழுப்புகிறோம். ஆனால், அதிமுக சட்டப்பேரவையில் ஊழல் குறித்து பேசவில்லை. அதற்கு காரணம் என்ன என்பது குறித்து அவர்களிடம் தான் கேட்க வேண்டும்.

மக்கள் பிரச்சினைகளை வெளிக்கொணர்வதில் ஊழல்களை வெளிக்கொண்டு வருவதிலும் எதிர்க்கட்சியான அதிமுக வலுவாக செயல்படவில்லை. எதிர்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமியும் வலுவாக செய்யப்படவில்லை. ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து பாஜக தெரிவிக்கும் கருத்துகள் தவறாக இருந்தால், தமிழ்நாடு அரசு இது தொடர்பாக வழக்கு தொடரலாம்.

இலங்கைக்கு கச்சத்தீவை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தாரை வார்த்து தந்தார். அதனை மீட்டு தர வேண்டும் என பிரதமரிடம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை வைக்கிறார். தந்தையின் வழியில் ஆட்சி என கூறும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறுவதை தவறு என கூற முடியாது. தமிழ்நாட்டின் உாிமைகளை விட்டுத்தரும் தவறை யார் செய்திருந்தாலும் அது தவறுதான். தமிழ்நாடு மட்டுமின்றி, இலங்கை தமிழர்களுக்கும் தேவையான நடவடிக்கைகளை பாஜக அரசு எடுத்து வருகிறது. கச்சத்தீவை பாஜக அரசு உறுதியாக மீட்கும். பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுப்பார்” என்றார்.

செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநில துணைத் தலைவர் விபி துரைசாமி

தொடர்ந்து பேசிய அவர், “திராவிட மாடல் ஆட்சி என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறிவருகிறார். ஆனால், திராவிட மாடல் என்பது குறித்து டிக்ஸ்னரியில் தேடிப்பாரத்தாலும் கிடைக்கவில்லை. தமிழறிஞர் கருணாநிதி இருந்தபோது கூட ஒன்றிய அரசு என கூறவில்லை. ஆனால், யாரோ சொல்வதை வைத்துக் கொண்டு இன்று பேசுகின்றனர். ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுப்பது தொடர்பாக ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் இதனை அரசியல் செய்கிறது. எனினும் ஜாதி ஒழிய வேண்டும் என்பதுதான் பாஜகவின் நிலைப்பாடும்” என்றார்.

தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு குறித்த கேள்விக்கு, “சேகர் பாபு, சினேக் பாபு போன்றோர் கூறிய கருத்துக்கு எல்லாம் பதில் கூற முடியாது” என்றார்.

இதையும் படிங்க: குஜராத் தேர்தல்: பாஜகவில் இணைந்தார் ஹர்திக் பட்டேல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.