ETV Bharat / state

’கரோனா தடுப்பூசி போடும் பணியில் தன்னார்வலர்களை ஈடுபடுத்த வேண்டும்’

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் அரசாங்கம் தனித்துச் செயல்படுவதை விடுத்து, தன்னார்வலர்களையும் அந்தப் பணியில் ஈடுபடுத்த வேண்டும். கரோனா இரண்டாம் அலைக்கு முன்னர் இதைச் செய்வது சாலச் சிறந்தது என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.

author img

By

Published : Mar 18, 2021, 7:53 PM IST

மருத்துவர்கள்
மருத்துவர்கள்

2020ஆம் ஆண்டு மக்கள் பல இன்னல்களைச் சந்தித்திருந்தாலும், கரோனாவுக்குத் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது என்ற நல்ல செய்தியோடுதான் இந்தப் புத்தாண்டு தொடங்கியது. ஒரு பக்கம் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுவந்தாலும், மறுபக்கம் கரோனா இரண்டாம் அலை அடிக்கத் தொடங்கிவிட்டது. ஏன் இந்தப் பின்னடைவு? தடுப்பூசி செலுத்துவதில் ஏதேனும் சிக்கல்கள் இருக்கின்றனவா? போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதா? என்பது குறித்து மருத்துவர்கள் சிலரிடம் கேட்டோம்.

கரோனா தடுப்பூசி போடும் பணி

தமிழ்நாட்டில் ஜனவரி 16ஆம் தேதிமுதல் கரோனா வைரஸ் (தீநுண்மி) தடுப்பூசி போடப்பட்டுவருகிறது. முதல்கட்டமாக, சுகாதாரத் துறை ஊழியர்கள், முன்களப் பணியாளர்களுக்கு கரோனா தீநுண்மி தடுப்பூசி போடப்பட்டது. தனியார் மருத்துவமனைகளில் 250 ரூபாய் கட்டணத்தில் தடுப்பூசி வழங்கப்பட்டுவருகின்றது.

தடுப்பூசி போடப்பட்டவர்களின் விவரம்

மார்ச் 17ஆம் தேதி வரை தடுப்பூசி போடப்பட்ட விவரம் வருமாறு:

சுகாதாரத் துறை பணியாளர்கள் - ஐந்து லட்சத்து 13 ஆயிரத்து 22

முன்களப்பணியாளர்கள் - மூன்று லட்சத்து 97 ஆயிரத்து 591

45 வயதிற்குள்பட்ட இணைநோய் உள்ளவர்கள் - மூன்று லட்சத்து 26 ஆயிரத்து 192

60 வயதிற்கு மேற்பட்டவர்கள் - நான்கு லட்சத்து 83 ஆயிரத்து 703

மொத்தம்- 17 லட்சத்து 20 ஆயிரத்து 508

கரோனா தடுப்பூசிகளை அரசு விரைந்து வழங்கிவந்தாலும், கரோனா தொற்று சில நாள்களாக அதிகரித்துவருகிறது. இதற்கு திருமண விழாக்கள், திருவிழா, குறிப்பாக தேர்தல் தொடர்பாக கூட்டங்களும் முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது. முக்கிய அரசியல் தலைவர்கள், அரசு அலுவலர்கள் மக்களுக்கு முன்மாதிரியாக கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்பும்கூட, அவற்றைச் செலுத்துவதில் மக்களுக்கு அச்சம் இருக்கத்தான் செய்கிறது. மக்களிடம் அதற்கான போதிய விழிப்புணர்வு இல்லையென்றுதான் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக ஓய்வுபெற்ற அரசு மருத்துவரும் தமிழ்நாடு உறுப்புமாற்று அறுவை சிகிச்சைத் திட்டத்தின் முன்னாள் ஒருங்கிணைப்பாளருமான மருத்துவர் அமலோற்பவநாதனிடம் கேட்டோம்.

“தமிழ்நாட்டில் முதல்கட்டமாக தடுப்பூசி செலுத்தும்போது, அதன் பணிகள் மந்தமாகவே இருந்தன. தற்போது 45 வயது முதல் 60 வயது உள்ளவர்களும், 60 வயதிற்கு மேற்பட்டவர்களும் விருப்பப்பட்டு தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். தினமும் ஒவ்வொரு மையத்திலும் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் போட்டுக் கொள்கின்றனர். இது ஊக்கமளிப்பதாக இருந்தாலும், மக்கள் இன்னும் அதிகளவில் போட்டுக் கொள்ள வேண்டும்.

இந்தியாவில் மூன்று விழுக்காடு மக்கள் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். 45 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு சர்க்கரை, ரத்தக் கொதிப்பு போன்ற இணை நோய்கள் இருந்தாலும், 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் நோய் பாதிப்பு இல்லாமல் இருந்தாலும் அலட்சியம் காட்டாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். இந்தத் தடுப்பூசி உங்களைப் பாதுகாக்கும்” என்கிறார் மருத்துவர் அமலோற்பவநாதன். அவரிடம் மேலும் சில கேள்விகளை முன்வைத்தோம்.

மருத்துவர் அமலோற்பவநாதன்

கிராமப்புறங்களில் விழிப்புணர்வு எந்த அளவிற்கு இருக்கிறது?

கிராமப்புறங்களில் நகரங்களைப்போல இன்னும் கரோனா பரவல் ஏற்படாததால், அவர்களுக்குப் பெரிதும் அச்சம் ஏற்படவில்லை. அவர்களுக்கு தொலைக்காட்சி, வானொலி, களப்பணி ஆகியவற்றின் மூலம் தடுப்பூசியின் முக்கியத்துவத்தை அரசு எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இந்தியாவில் இரண்டாவது அலை மீண்டும் வந்தால் அதனை கட்டுப்படுத்துவது கடினமாக இருக்கும்.

கரோனா 2ஆம் அலை பாதிப்பு எப்படியிருக்கும்?

இரண்டாம் அலை வருவதற்கு முன்னரே பெரும்பாலான மக்களுக்குத் தடுப்பூசி போட்டுவிட்டால் அது வராமல் தடுத்துவிடலாம். தடுப்பூசி போடும் திட்டத்தில் தன்னார்வலர்களை ஈடுபடுத்தவில்லை என்பது சற்று வருத்தமாகத்தான் இருக்கிறது. அரசால் மட்டும் எந்தத் திட்டத்தின் இலக்கையும் அடைய முடியாது.

இந்தியாவில் 16 வயதிற்குமேல் உள்ளவர்களுக்குத் தடுப்பூசி செலுத்த அரசால் மட்டுமே முடியாது. கரோனா காலத்தில் அரசு அலுவலர்கள் கடந்த ஒரு ஆண்டு காலமாகப் பணியாற்றி அழற்சியில் உள்ளனர். எனவே பொதுமக்களும் தடுப்பூசி போடுவதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இந்தியாவில் சில மாநிலங்களில் கரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மகாராஷ்டிராவில் கரோனா பாதிப்பு அதிகரித்ததால் ஊரடங்குப் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இப்போதுதான் அதற்குரிய அறிகுறிகள் தோன்றுகின்றன. மக்கள் விழிப்புணர்வு அடைந்தால், இரண்டாம் அலை வராமல் தடுக்கலாம்.

கரோனா முதல் அலையில் தமிழ்நாட்டில் 20 விழுக்காட்டினர்தான் பாதிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 80 விழுக்காட்டினர் பாதிக்காமல் இருக்கின்றனர். இரண்டாம் அலை, முதல் அலையைவிட அதிக பாதிப்பை ஏற்படுத்தும். தேர்தல் நேரத்தில் மக்கள் கூட்டம் அதிகரிக்கும். இதுபோன்ற காலங்களில் மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என மருத்துவர் அமலோற்பவநாதன் எச்சரிக்கையுடன் தன் பதிலை நிறைவுசெய்தார்.

தடுப்பூசியின் பொதுப்புத்தியை களைவது தொடர்பாக மாநில குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலரும், குழந்தைகள் மருத்துவருமான சீனிவாசனிடம் கேட்டபோது, "தடுப்பூசி என்றால் அது குழந்தைகளுக்குத்தான் மக்கள் கருதுகின்றனர். இளைஞர்களுக்கும், முதியவர்களுக்கும் தடுப்பூசி இந்தியாவில் போடுவதில்லை. வெளிநாடுகளில் ஆண்டுதோறும் தீநுண்மி தடுப்பூசி போடுகின்றனர். கரோனா நோய் வந்து உயிர்ச்சேதம் ஏற்படுவதைவிட, தடுப்பூசி போட்டு தற்காத்துக் கொள்ளலாம் என நம்பிவருகின்றனர். இதனால் தடுப்பூசி அதிகளவில் போட்டுவதற்கு முன்வருகின்றனர்.

மருத்துவர்களில்கூட இளைஞர்கள் போடாமல் இருந்தனர். இதன் பின்னணியில் பெற்றோர்களின் தலையீடு இருந்ததும் தெரியவந்தது. தற்பொழுது இளம் மருத்துவர்களும் காலத்தின் கட்டாயத்தைப் புரிந்துகொண்டு விழிப்போடு தடுப்பூசி போட்டுவருகின்றனர். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏதும் கிடையாது. எந்தத் தடுப்பூசி போட்டாலும் சில நாள்கள் ஜுரம் வருவது வழக்கமானது.

மாநில குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் சீனிவாசன்

கரோனா பாதிப்பு கிராமங்களில் அதிகளவில் பரவியதாகத் தெரியவில்லை. நகரத்தில் பாதிப்பு அதிகளவில் ஏற்பட்டது. ஒரு சில கிராமங்களில் கரோனா பாதிப்பு ஏற்படவில்லை. இதனால் அதன் தாக்கம் அவர்களுக்குத் தெரியவில்லை.

இந்நிலையில், கிராமப்புறங்களிலும் மக்கள் நல்வாழ்வுத் துறையினர் கரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திவருகின்றனர். குழந்தைகளுக்குப் போடுவதற்கான தடுப்பூசி போடுவதில் விழிப்புணர்வு இருந்ததுபோல் கரோனா தடுப்பூசி போடுவதிலும் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க:தாய்ப்பால் மூலம் கரோனா பரவுமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.