மதுரவாயில் சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த முறை போட்டியிட்டு வெற்றிபெற்ற ஊரக தொழில்துறை அமைச்சர் பதவிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மதுரவாயல் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் அமைச்சர் பெஞ்சமின் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுவருகிறார்.
முகப்பேர் பகுதியில் வாக்கு சேகரித்த அமைச்சர் பெஞ்சமினுக்கு அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதைத் தொடர்ந்து, வழியெங்கிலும் செண்டை மேளம் முழங்க மாலை அணிவித்தும், பெண்கள் ஆரத்தி எடுத்து 108 தேங்காய் உடைத்தும் வரவேற்றனர்.
அப்போது அங்கிருந்த சிறுவர், சிறுமியர் எடப்பாடி உருவம் பதித்த பதாகையுடன் அமைச்சருக்கு வாக்கு சேகரித்தனர். மேலும் முகப்பேர் கருமாரியம்மன் தெருவில் அமைச்சரை வரவேற்க வாழை, தோரணையுடன் திருவிழாபோல் மேளம், கரகாட்டம் என களைகட்டியது. அப்போது வாக்கு சேகரிக்க வந்த அமைச்சரை தொண்டர்கள் மொட்டை மாடியிலிருந்து மலர்களை மூட்டை, மூட்டையாகத் தூவி வரவேற்றனர்.
இதையும் படிங்க: அமைச்சர்கள் பரப்புரை செய்ய தடைவிதிக்கக் கோரி மனு!