ETV Bharat / state

வெளிநாடுகளிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு மருத்துவ உபகரணங்கள் வருகை - From abroad in Chennai Pharmacies

சென்னை: வெளிநாடுகளிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு மருத்துவ உபகரணங்கள் கார்கோ விமானத்தில் வந்தடைந்தன.

சென்னை விமான நிலையத்திற்கு மருத்துவ உபகரணங்கள் வருகை

author img

By

Published : Apr 26, 2020, 12:18 PM IST

கரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு தமிழ்நாட்டில் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதனைக் கட்டுப்படுத்த எவ்வித தளர்வுகளுமின்றி மே 3ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடிய மருத்துவ உபகரணங்கள் வெளிநாடுகளிலிருந்து சென்னை வந்துகொண்டிருக்கிறது.

இந்நிலையில் சென்னை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வந்த சரக்கு விமானத்தில் 63 பாா்சல்களில் கரோனா வைரஸ் பரவல் தடுப்பிற்கான மருத்துவ உபகரணங்கள் வந்தன. அதில் உயிர்க்காக்கும் சுவாசக் கருவியான வென்ட்டிலேட்டர்கள் தயாரிப்பதற்கான உதிரி பாகங்கள் தாய்வான் நாட்டிலிருந்தும், அதிநவீன தொ்மா மீட்டர்கள் சீனாவிலிருந்தும் வந்தன.

சென்னை விமான நிலைய கொரியர் பாா்சல்கள் அலுவலகத்தில் சுங்கத் துறையினர் உடனடியாகப் பார்சல்களை ஆய்வுசெய்து டெலிவரி கொடுத்து அனுப்பினர்.

இதையும் படிங்க: விவசாயிகளுக்கு சலுகைகள் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.