சென்னை: நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர். இவரது நடிப்பில் ‘லத்தி’ என்ற திரைப்படம் கடைசியாக வெளியானது. ஆனால் அப்படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. கடைசியாக விஷாலுக்கு மிகப் பெரிய வெற்றியை கொடுத்த திரைப்படம் என்றால் அது ‘மலைக்கோட்டை’ தான். இதை அவரே பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.
இந்த நிலையில், தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்து வெளியான திரைப்படம் மார்க் ஆண்டனி. ஆதிக் ரவிச்சந்திரன், ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’, ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’, ‘பகீரா’ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இந்த படங்கள் எல்லாம் அடல்ட் படங்கள் வகையை சார்ந்தவை.
இதனால் இவருக்கு திரையுலகில் வேறு ஒரு பெயர் இருந்தது. இந்த மார்க் ஆண்டனி திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, ரித்து வர்மா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
செல்போனில் டைம் டிராவல் என புதுமையான திரைக்கதையுடன் உருவாக்கப்பட்ட இப்படம் வசூலில் சக்கை போடு போட்டது. மேலும், விஷால் நடித்த படங்களில் 100 கோடி ரூபாய் வசூலித்த படமாகவும் மாறியது. இதில் சில்க் ஸ்மிதா, பஞ்சு மிட்டாய் சேலை கட்டி என எவர்கிரீன் விஷயங்கள் படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்தன.
நீண்ட காலமாக ஒரு மிகப் பெரிய வெற்றிக்கு காத்துக் கொண்டிருந்த விஷாலுக்கு, அவர் நினைத்த வெற்றியை கொடுத்துள்ளது மார்க் ஆண்டனி. தற்போது வரையிலும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், இன்று (அக்.08) மார்க் ஆண்டனி திரைப்படம் 25-வது நாளை கடந்துள்ளது. சமீப காலமாக ஒரு படம் ஒரு வாரத்தை தாண்டுவதே கடினமாக உள்ள சூழலில், மார்க் ஆண்டனி திரைப்படம் 25-வது நாளை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
விஷாலுக்கும் இப்படம் மிகப் பெரிய வெற்றியை கொடுத்துள்ளது. நடிப்பு அரக்கன் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பும் இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இரண்டு வேடங்களில் கலக்கிய எஸ்.ஜே.சூர்யா தனது சூப்பரான நடிப்பைக் கொடுத்துள்ளார் என்பதே உண்மை. இதன் காரணமாக தற்போது இப்படம் 25 நாட்களை வெற்றிகரமாக கடந்து ஓடிக்கொண்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நானியின் 'ஹாய் நானா' படத்தின் பாடலை வெளியிட்ட நடிகர் சிவகார்த்திகேயன்!