தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். வைரஸைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஜூன் 9ஆம் தேதி முதல் ஜூலை 5ஆம் தேதி வரை, முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.
இதுதொடர்பாக பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், "சென்னையில் உள்ள பெரும்பாலான மக்கள் வீடுகளில் முடங்கி இருந்ததால், சோதனைகளை விரைவுபடுத்துவதற்கும் வீடு வீடாகச் சென்று பரிசோதனை செய்து சிறு அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்துவதற்கும் இந்த ஊரடங்கு மிகவும் உதவியாக இருந்தது.
பாதிக்கப்பட்டவர்களையும் உடன் இருந்தவர்களையும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களையும் விரைவாக கண்டுபிடிக்க முடிந்தது.
குணமடைந்தோரின் விழுக்காடும் பல மண்டலங்களில் அதிகரித்துள்ளது. இந்த முழு ஊரடங்கு மூலம் பெருமளவில் கரோனா பரவல் தவிர்க்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.