ETV Bharat / state

பேருந்தில் மனைவியிடம் தகாத முறையில் நடந்தவரை தட்டிக்கேட்ட கணவர் - காவலர் எனக்கூறி மிரட்டிய ஆசாமி - தம்பதியிடம் தகராறு செய்யும் வீடியோ

பேருந்தில் பயணித்த பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்டு, தகாத வார்த்தைகளால் திட்டுபவரின் வீடியோ வெளியாகியுள்ளது. மேலும், தன்னை காவலர் எனக்கூறிய நிலையில் அவர் யார் என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Etv Bharat காவலர் என கூறி மிரட்டியவரின் வீடியோ

author img

By

Published : Oct 2, 2022, 5:27 PM IST

சென்னை: அரசுப்பேருந்தில் ஒரு தம்பதி பயணம் செய்தனர். அவர்களின் பின் இருக்கையில் இருந்த நபர் ஒருவர் பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாகத் தெரிகிறது. இதனால், அவரது கணவர், பின் இருக்கையில் அமர்ந்திருந்தவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

வாக்குவாதத்தின்போது அந்நபர் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். மேலும், தான் ஒரு காவல் அலுவலர் எனவும்; ஆவடி காவல் நிலையத்தில் பணியாற்றி வருவதாகவும் கூறியுள்ளார். இந்த விவகாரம் அனைத்தையும் அங்கிருந்தவர்கள் தங்களது செல்போனில் வீடியோ எடுத்தனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

மேலும், ஆவடி காவல் துறை மற்றும் காவல் ஆணையரை சமூக வலைதளத்தில் பொதுமக்கள் டேக் செய்து, இந்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, கோரிக்கை வைத்து வருகின்றனர். தொடர்ந்து இந்த வீடியோ தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அந்தச்சம்பவம் கோயம்பேடு பகுதியில் சென்று கொண்டிருந்த ஒரு பேருந்தில் நடந்தது தெரியவந்துள்ளது. மேலும், ஆவடி காவல் துறையைச் சேர்ந்தவர் எனக்கூறி தம்பதியை மிரட்டும் நபர் ஆவடி காவல் நிலையத்தில் பணியாற்றவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

காவலர் எனக்கூறி மிரட்டிய ஆசாமி

இதுதொடர்பாக புகார் ஏதும் அளிக்கப்படாத நிலையில் வீடியோவை வைத்து, தன்னை காவலர் எனக் கூறிய நபர் யார் என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: நாகர்கோவிலில் திருவிழாவில் பட்டாசு விபத்து... 14 பேர் படுகாயம்...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.