சென்னை: இந்த ஆண்டு முன்னெப்போதும் இல்லாத அளவிற்குக் குளிர்காலம் அதிகமாக உள்ளது. இதனால் பனிப்பொழிவு அதிகரித்து, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் பருவகால உடல் உபாதைகளால் பாதிப்படைந்துள்ளனர். அதிலும் குறிப்பாகக் குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
இதன்படி 30 சதவீதம் முதல் 50 சதவீதம் குழந்தைகள் இருமல் மற்றும் சளி போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சராசரியாக 40 சதவீத குழந்தைகள் சுவாச தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் புறநோயாளிகளாக அனுமதிக்கப்படுகின்றனர்.வை அதேநேரம் பிறந்த குழந்தைகளும் சுமார் 6 மாத காலம் வரை சுவாச தொற்றுகளிலிருந்து பாதுகாக்கப்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கு தற்போது நிலவி வரும் குளிர் ஒருபுறம் காரணமாக இருந்தாலும், மறுபுறம் குழந்தைகளுக்கு எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பதும் காரணமாக உள்ளது என கூறப்படுகிறது. எனவே குழந்தைகளைக் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். இதன்படி, சளி, இருமல், தொண்டை வலி, சுவாசப் பிரச்னை உள்ளிட்டவை இருந்தால், குழந்தைகளை பள்ளி மற்றும் கூட்டமாக உள்ள பகுதிகளுக்குச் செல்ல விடாமல் தடுக்க வேண்டும்.
இதன் மூலம் மற்றவர்களுக்குப் பரவுவது தடுக்கப்படுகிறது. குழந்தைகளின் 5 வயது வரை, தேவையான மற்றும் பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசிகளை முறையாகச் செலுத்த வேண்டும். முகக்கவசம் அணிதல் மற்றும் கைகளைச் சுத்தமாகக் கழுவுதல் உள்ளிட்டவற்றைக் குழந்தைகள் மத்தியில் முறைப்படுத்த வேண்டும்.
இதையும் படிங்க: மருத்துவக் காப்பீட்டில் காத்திருப்பு காலம் என்றால் என்ன?