சென்னை: ஐஐடி உதவிப்பேராசிரியர் விபின், அங்கு நிலவும் சாதியப் பாகுபாடு காரணமாகப் பணியில் இருந்து விலகுவதாக மின்னஞ்சல் மூலம் புகார் அளித்திருந்தார்.
மேலும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நேரில் விசாரணை நடத்தி, சாதியப் பாகுபாடுகளை களைய நடவடிக்கை எடுப்பதுடன், சாதியப் பாகுபாட்டைத் தவிர்க்க அறிவுரைகளை வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி இருந்தார்.
விபின் பணியிலிருந்து விலகியது தொடர்பாக விளக்கம் கேட்டதற்கு, ஐஐடி நிர்வாகம் விளக்கமளிக்க மறுத்துவிட்டது.
இவ்விவகாரத்தில், அதனைத் தொடர்ந்து தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் நேரில் வந்து விசாரணை நடத்தினார். அப்போது, ஐஐடியில் சாதியப் பாகுப்பாடுகள் இல்லை எனத் தகவல் கிடைத்தது.
இந்நிலையில் தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தில் விபின் முறையீடு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: சென்னைப் பல்கலைக்கழகம் - தொலைதூரப் படிப்புகளில் சேர மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விநியோகம்