ETV Bharat / state

வழிப்பறி, பட்டாக்கத்தி தாக்குதல் சென்னையில் அதிகரிக்கும் வன்முறை! - robbery in chennai

சென்னை: வழிப்பறியில் ஈடுபட்டு பட்டாக்கத்தியால் தாக்கி தப்பிசெல்ல முயன்ற இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

வழிப்பறி, பட்டாக்கத்தி தாக்தல் சென்னையில் அதிகரிக்கும் வன்முறை!

author img

By

Published : Oct 17, 2020, 3:06 PM IST

சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் ஆதிவாசி நகர் குறுக்கு தெருவை சேர்ந்தவர் சோமு (24). இவர், லாரி ஓட்டுநராக பணிபுரிந்துவருகிறார். அதே பகுதியை சேர்ந்த கோகுல்(22) தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் இரண்டு பேரும் நேற்று நள்ளிரவு அனகாபுத்தூர் பிரதான சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தனர். அப்போது மூன்று பேர் கொண்ட கும்பல் அவர்களை வழிமறித்து கத்தியை காட்டி சோமுவிடம் இருந்து ரூ.2000 பணத்தை பறித்துள்ளனர்.

கோகுலிடம் பணம் இல்லாததால் இருவரும் அங்கிருந்து தப்பி ஓட முயற்சித்துள்ளனர். அப்போது அவர்களை துரத்திச் சென்ற வழிப்பறி கும்பல் பட்டாக்கத்தியால் இருவரையும் சரமாரியாக தாக்கியுள்ளது. இதில் இருவருக்கும் முதுகு மற்றும் தலை ஆகிய பகுதிகளில் பத்துக்கும் மேற்பட்ட வெட்டுக் காயங்கள் விழுந்துள்ளன.

இதையடுத்து, அங்கிருந்து தப்பி செல்ல முயன்ற வழிப்பறி கும்பலை சேர்ந்த இருவரை மடக்கிப்பிடித்த அங்கிருந்த பொதுமக்கள், அவர்களை சங்கர் நகர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் படுகாயமடைந்த கோகுல், சோமு ஆகியோரை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

காவல்துறையினர் வழிப்பறி கும்பலிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் அனகாபுத்தூர் பகுதியைச் சேர்ந்த பாஷா(25), அஜய்(23) என தெரியவந்தது. இவர்கள் கஞ்சா வழக்கில் சிறைக்கு சென்று வந்துயிருப்பதும் தெறியவந்தது. மேலும் தப்பி ஓடிய கோபியை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.