ETV Bharat / state

திமுக ஆட்சியிலும் தொடரும் பூர்வகுடிகள் மீதான வன்முறை - திருமுருகன் காந்தி - THIRUMURUGANGANDHI

திமுக ஆட்சியிலும் பூர்வகுடிகள் மீதான வன்முறை தொடர்வதாக மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சியிலும் தொடரும் பூர்வகுடிகள் மீதான வன்முறை - திருமுருகன் காந்தி

author img

By

Published : May 9, 2022, 7:07 AM IST

சென்னை: ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள கோவிந்தசாமிநகர் இளங்கோ தெருவில் 250 வீடுகள் நீர்நிலைகளின் ஆக்கிரமிப்பில் இருப்பதாக தனிநபர் தொடர்ந்த வழக்கில் வீடுகளை அப்புறப்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வீடுகளை அகற்றும் பணியை பொதுப்பணித்துறை அதிகாரிகள் மேற்கொண்டனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆனால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகளின் உதவியுடன் வீட்டை அகற்றும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். கிட்டதட்ட 5 நாட்களில் சுமார் 80 வீடுகள் அகற்றப்பட்டுள்ளன. இன்று காலையில் வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து முதியவர் ஒருவர் தீக்குளித்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து மே 17 இயக்கத்தை சேர்ந்த திருமுருகன் காந்தி ட்விட்டர் பக்கத்தில் விடுத்துள்ள பதிவில், "ஒரு பெருநகரம் என்பது அனைத்து மக்களுக்குமானது மட்டுமல்ல, அந்நகரை உருவாக்கிய பூர்வகுடிகளுக்கானது. அவர்களை குப்பையை போல அள்ளி ஊருக்கு வெளியே தூக்கி எறிவது மக்களாட்சிக்கு நல்லதல்ல. இந்த எதேச்சதிகாரத்தை நீதிமன்றங்களும், அதிகாரவர்க்கங்களும், ஆட்சியாளர்களும் தொடர்ந்து நிகழ்த்துகிறார்கள்.

அதிமுக ஆட்சியில் இது நடந்தது. அவர்களுக்கு முந்தைய திமுக ஆட்சியிலும் நடந்தது. இன்றைய திமுக ஆட்சியிலும் இது நடக்கிறது. நீதிபதிகள், IAS,IPS அதிகாரிகள், அமைச்சர் பெருமக்களை 220 ச.அடி வீட்டில் பெரும்பாக்கத்தில் குடியேற்றி அழகு பாருங்கள். கார், ட்ரைவர்கள், பணியாளர்கள் என சகல வசதிகளோடு ஊருக்கு மையத்திலேயே இவர்களுக்கு வீடு இருப்பது அவசியமெனில், எந்த வசதியுமற்ற அன்றாடங்காய்ச்சியாக வாழும் பூர்வகுடிகள் எதற்காக 30கி.மி தொலைவிற்கு சென்று வாழவேண்டும்? உத்தரவிட்ட நீதிபதியும் அதிகாரியும், அமைச்சரும் குறைந்தது ஒருவார காலம் கண்ணகி நகரில் வாழ்ந்துவிட்டு. வந்து உத்தரவிடட்டும்.

சுகபோக வாழ்வு வாழும் இந்நபர்கள் மக்கள் விரோதிகளாக, ஏழை, பூர்வகுடிகள் மீது நவீன தீண்டாமை கடைபிடிக்கும் நபர்களாகவே செயல்படுகிறார்கள். சென்னையில் திமுக ஆட்சியிலும் தொடர்ந்து கொண்டிருக்கும் பூர்வகுடிகள் மீதான வன்முறையை எதிர்த்து சனநாயக ஆற்றல்கள் ஒன்றுபட வேண்டும்" என திருமுருகன் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: தருமபுரம் ஆதீன பட்டினப் பிரவேசத்திற்குத் தடை நீக்கம்..!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.