தமிழ்நாட்டில் விதிமீறல் கட்டடங்ளால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டுவந்தன. இவற்றை வரன்முறைப்படுத்த 2017இல் அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி அங்கீகாரம் இல்லாத மனைகள், கட்டடங்களை வரன்முறை செய்ய நகர், ஊரமைப்புச் சட்டத்தில் 113 சி என்ற புதிய பிரிவு சேர்க்கப்பட்டது.
இதற்கான கால அவகாசம் தொடர்ந்து ஐந்து முறை நீட்டிக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் ஆறாவது முறையாக கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தக் கால அவகாசம் கடந்த டிசம்பர் 25ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இந்நிலையில் தற்போது ஆறாவது முறையாக கால அவகாசத்தை நீட்டித்த வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலாளர் ராஜேஷ் லக்கானி அரசாணை வெளியிட்டுள்ளார்.
இதன்மூலம் அடுத்த ஆறு மாதத்தில் விதிமீறிய கட்டடங்களை வரன்முறைப்படுத்த விரும்புவோர் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: முகவர்கள் அனுமதிப்பதில் முறைகேடு: ஆளும் கட்சியினர் சாலை மறியல்