சென்னை : திருச்சியை அடுத்த திருவெறும்பூரில் கோபால் என்பவர் வெல்டிங் பட்டறை வைத்திருந்த நிலையில், கடந்த 2015ஆம் ஆண்டு நாவல்பட்டு காவல் நிலையத்தினர் கடையையும், வீட்டையும் காலி செய்ய சொல்லி மிரட்டியதாகவும், இதுதொடர்பாக திருவெறும்பூர் காவல் துணை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கோபாலின் மனைவி அமுதா மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.
டி.எஸ்.பி.யிடம் புகார் அளித்த அன்றே நவநீதகிருஷ்ணன் என்பவர் தாக்கியதால், அவர் மீது நடவடிக்கை கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்ததால் தன் மீதும், கணவனர் மீதும் மற்றொரு பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகந்தாஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறையின் மனித உரிமை மீறலில் ஈடுபட்டது நிரூபணமாவதாக கூறி, அமுதாவிற்கு இழப்பீடாக ரூ. 3 லட்சத்தை 8 வாரங்களில் வழங்கவும், காவல் நிலையத்தினர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் தமிழ்நாடு உள்துறை செயலாளருக்கு உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: மனித உரிமை என்ற பெயரில் போலி அமைப்புகள் தொடங்கினால் நடவடிக்கை - சைலேந்திர பாபு