ETV Bharat / state

சிட்லப்பாக்கத்தில் 17ஆம் ஆண்டு விநாயகர் கண்காட்சி..! அமைச்சர் தா.மோ. அன்பரசன் துவங்கி வைத்தார்! - Chitlapakkam

சிட்லப்பாக்கத்தில் விநாயகர் சதுர்த்தி தினத்தை ஒட்டி 20 ஆயிரம் சிலைகளுடன் பிரம்மாண்டமான கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது

அமைச்சர் தா.மோ.அன்பரசன் துவங்கி வைத்தார்
சிட்லப்பாக்கத்தில் 17 ஆம் ஆண்டு விநாயகர் கண்காட்சி
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 18, 2023, 2:40 PM IST

சென்னை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று (செப்.18) சிட்லப்பாக்கத்தில் 20 ஆயிரம் விநாயகர் சிலைகள் கொண்ட 17 ஆம் ஆண்டு விநாயகர் கண்காட்சியை அமைச்சர் தா.மோ.அன்பரசன் துவங்கி வைத்தார்.

சிட்லப்பாக்கத்தில் 17 ஆம் ஆண்டு விநாயகர் கண்காட்சி

சென்னை குரோம்பேட்டை, ராதாநகரை சேர்ந்தவர் கட்டிட கலை நிபுணர் சீனிவாசன். தீவிர விநாயகர் பக்தரான இவர் கடந்த 16 ஆண்டுகளாக ஆயிரகணக்கான விநாயகர் சிலைகளுடன் கண்காட்சி நடத்தி வருகிறார்.

இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, தாம்பரம் அடுத்த சிட்லப்பாக்கம், காந்தி தெரு, ஸ்ரீலட்சுமி ராம் கணேஷ் மகாலில் 20ஆயிரம் விநாயகர் சிலைகளுடன் கூடிய 17 ஆம் ஆண்டு விநாயகர் கண்காட்சி துவங்கியது. கண்காட்சியானது இன்று துவங்கி செப்டம்பர் 28ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

மேலும், கண்காட்சியில் அரை இன்ச்சில் இருந்து 8 அடி உயரம் வரையிலான பல்வேறு விதமான விநாயகர் சிலைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதில் தங்கம், வெள்ளி, செம்பு, பித்தளை, ஐம்பொன், இரும்பு, கண்ணாடி உள்ளிட்டவற்றால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் இடம் பெற்றுள்ளன. கண்காட்சியை காலை 9 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 7 மணி வரையிலும் பொதுமக்கள் பார்க்க இலவசமாக அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த ஆண்டு கண்காட்சியில், பல்வேறு புதிய விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இதில் சந்திராயன் பிள்ளையார், ஏழரை அடி உயரத்தில் அத்தி மரத்தில் செய்யப்பட்ட அத்திவரதர் விநாயகர் சிலை, கண்ணாடி மாளிகையில் சொர்க்கத்தில் இருப்பது போன்ற சொர்க்க வாசல் விநாயகர், ஸ்கூட்டர், சைக்கிள், கார், ரயில் ஓட்டும் விநாயகர், இசைக் கலைஞர்களாக பல்வேறு வாத்தியங்களை இசையமைக்கும் விநாயகர், விநாயகரின் சயன திருக்கோலத்தில் பல்வேறு வடிவங்களில் 200 சிலைகள் இடம் பெற்றுள்ளது.

மேலும், நர்த்தன கணபதி, காசியானந்த கணபதி என பல்வேறு உருவங்களில் உள்ள விநாயகர் சிலைகள் அத்தி மரத்தில் செதுக்கப்பட்டிருந்தன. இவை அனைத்தும் கண்காட்சியில் இடம்பெற்றது பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந்த கண்காட்சியில் உலகில் பல்வேறு நாடுகளில் உள்ள விநாயகர் கோயில் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன.

அதனைத்தொடர்ந்து, 5 அடி உயர தங்க நிற யானையில், விநாயகர் சிவனுக்கு பூஜை செய்யும் சிலை, விநாயகர் அலங்கார சிலைகள், சந்தனத்தில் செய்யப்பட்ட திண்டு விநாயகர், படகு ஓட்டும் விநாயகர், விநாயகர் திருக்கல்யாணம், செஸ், கிரிக்கெட், கேரம் விளையாடும் விநாயகர், முருகன் மற்றும் பார்வதியுடன் பல்வேறு வாகனங்களில் செல்லும் விநாயகர், வனத்தில் இருக்கும் விநாயகர் என பல்வேறு வகைகளில் 20 ஆயிரம் விநாயகர் சிலைகள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.

இந்நிலையில், இந்த கண்காட்சியை ஊரக தொழிற்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் துவங்கி வைத்து விநாயகர் சிலைகளை பார்வையிட்டு, இறுதியாக பிரசாதம் சாப்பிட்டார்.

இதையும் படிங்க: Ganesh Chaturthi in Dindigul: ஆசியாவிலேயே ஒரே கல்லில் ஆன 32 அடி உயர விநாயகர்.. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.