ETV Bharat / state

TN VAO hacked: பாதுகாப்புக்கு துப்பாக்கி வேண்டும்.. கிராம நிர்வாக அலுவலர்கள் போர்க்கொடி - Tamil Nadu vao murder

தூத்துக்குடி மாவட்டத்தில் பணியில் இருந்த கிராம நிர்வாக அலுவர் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Village Administrative Officers Association protest in Tambaram to condemn the killing of VAO in Thoothukudi
தூத்துக்குடியில் விஏஓ கொலை செய்யப்பட்டதை கண்டித்து தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகம் முன் கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்
author img

By

Published : Apr 26, 2023, 9:37 AM IST

தூத்துக்குடியில் விஏஓ கொலை செய்யப்பட்டதை கண்டித்து கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்

சென்னை: தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு அருகே கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலகத்தில் லூர்து பிரான்சிஸ் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வந்தார். நேற்று(செவ்வாய்கிழமை) அலுவலகத்தில் புகுந்த மர்ம நபர்கள் பணியில் இருந்த கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸை சரமாரியாக அரிவாள் கொண்டு ஓடஓட வெட்டினர். இந்த கொடூர தாக்குதலில் பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில், நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட லூர்து பிரான்சிஸ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

கிராம நிர்வாக அலுவகத்திற்குள் புகுந்து மர்ம நபர்கள் நடத்திய இந்த கொலைவெறி தாக்குதல் சம்பவம் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக அறிக்கை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதோடு உயிரிழந்த கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி ரூ.1 கோடி நிவாரணம் அறிவித்தார். மேலும் கருணை அடிப்படையில் லூர்து பிரான்சிஸ் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் மணல் கடத்தல் கும்பலால் கிராம நிர்வாக அலுவலர் அவரின் அலுவலகத்திலேயே வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து நேற்று தமிழ்நாடு முழுவதும் கிராம நிர்வாக அலுவலர்கள் கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் செங்கல்பட்டு மாவட்ட தலைவர் ஜானகிராமன் தலைமையில் கிராம நிர்வாக அலுவலர்கள் கருப்பு பட்டை அணிந்தவாறு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, தங்களுக்கு பணியின் போது பாதுகாப்பு ஏற்படுத்த தனி பாதுகாப்பு சட்டம் இயற்றிட வேண்டும், பொதுப்பணி த்துறை, கனிம வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை அந்த அந்த துறையினரே பாதுகாத்து கொண்டு கிராம நிர்வாக அலுவலகர்கள் பணிச் சுமையை குறைக்க வேண்டும். முக்கிய நகரங்களில் அரசு நிலங்கள் உள்ளிட்ட பாதுகாத்திட கிராம நிர்வாக அலுவலகளுக்கு துப்பாக்கி வைத்து கொள்ள பயிற்சியுடன் அனுமதியும் அளித்திட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தினர்.

முன்னதாக அந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர், கொலை செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிராசிஸ்-க்கு சிறிது நேரம் மவுண அஞ்சலி செலுத்தினார். கொலை செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலரின் குடும்பத்திற்கு இழப்பீடு தொகையாக ஒரு கோடி வழங்கப்படும் என தமிழக அரசு உடனடியாக அறிவித்தற்கும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்ததற்கும் நன்றி தெரிவித்தனர்.

இதையும் படிங்க: Chennai Local Train: விபத்தில் சிக்கிய நண்பனை காப்பாற்ற முயன்ற இளைஞர் ரயில் மோதி பலி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.