ETV Bharat / state

காயத்தில் இருந்து மீண்ட நடிகர் விக்ரம்.. விரைவில் 'தங்கலான்' ஷூட்டிங்கில் இணைகிறார்! - பா ரஞ்சித்

தங்கலான் படப்பிடிப்பு ஒத்திகையின் போது ஏற்பட்ட காயத்தால் ஓய்வு எடுத்து வந்த விக்ரம் தற்போது முழுவதுமாக குணமாகி மீண்டும் படபிடிப்பில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காயத்தில் இருந்து மீண்ட நடிகர் விக்ரம் - விரைவில் தங்கலான் படப்பிடிப்பில் இணைகிறார்!

author img

By

Published : Jun 11, 2023, 12:59 PM IST

சென்னை: தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர்கள் குறைவு. ஆனால், போற்றப்பட்டு ரசிக்கப்படும் நடிகர்களின் எண்ணிக்கை எண்ணிலடங்காதவை. அந்த வகையில், திரைத்துறையில் பெரும் வெற்றியை குவிக்காவிடினும் சில நடிகர்கள் தங்களது நடிப்பாலும், விடா முயற்சியாலும் திரையுலகில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்திருப்பர். அந்தவகையில் நடிகர் விக்ரம் தமிழ் சினிமாவின் நடிப்பு பிதாமகன் எனப் போற்றப்படுபவர்.

எவ்வித கதாபாத்திரமாக இருந்தாலும் சிறப்பான நடிப்பை வழங்குவதில் கில்லாடி. ஆனால் சமீப காலமாக இவர் நாயகனாக நடித்த படங்கள் பெரிதளவில் பேசப்படவில்லை என்று தான் கூற வேண்டும். இருப்பினும், தற்போது மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலனாக நடித்த விக்ரம் நடிப்பு பலரது பாராட்டுகளையும் பெற்றது.

ஆனால், கௌதம் மேனன் இயக்கத்தில் இவர் நடித்த துருவ நட்சத்திரம் திரைப்படம் இப்போது, அப்போது என இன்னும் வெளிவராமல் உள்ளது. பொன்னியின் செல்வன் திரைப்படத்தைத் தொடர்ந்து, விக்ரம் தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் என்ற படத்தில் நடித்து வருகிறார். வரலாற்றுப் படமான இதில் விக்ரமின் வித்தியாசமான தோற்றம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

தங்கலான் படம் கேஜிஎப் பகுதியில் வாழ்ந்த தமிழர்களின் கதையை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ளது. இதற்காக விக்ரம் கடுமையான உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.‌ இயக்குனர் பாலாவுக்கு பிறகு பா.ரஞ்சித் மீது நடிகர் விக்ரம் மிகுந்த நம்பிக்கையும், மரியாதையும் வைத்துள்ளார். இதனால் தங்கலான் படப்பிடிப்பில் மிகுந்த உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் கலந்துகொண்டு நடித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த மாதம் (மே 2) தங்கலான் படப்பிடிப்பு ஒத்திகையின் போது, நடிகர் விக்ரமுக்கு விலா எலும்பில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவரை அணுகிய நிலையில், ஒரு மாதம் ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதன் காரணமாக தங்கலான் படப்பிடிப்பில் நடிகர் விக்ரம் கலந்து கொள்ளாமல் ஓய்வில் இருந்தார்.இது விக்ரம் ரசிகர்களை வருத்தம் அடையச் செய்தது.

இந்நிலையில், தற்போது உடல் நிலை முழுமையா குணமடைந்த விக்ரம் மறுபடியும் 'தங்கலான்' படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் நடிகர் விக்ரமுக்கும் திருப்புமுனையை ஏற்படுத்தும் படமாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது. இப்படத்தை இந்த ஆண்டுக்குள் வெளியிட வேண்டும் என்று பா.ரஞ்சித் மற்றும் விக்ரம் இருவரும் முடிவு செய்துள்ளனர். இதனை தொடர்ந்து பா.ரஞ்சித் சார்பட்டா பரம்பரை படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: Nayanthara: திருமண நாளில் உருகிய விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.