சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கண்தான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் விக்ரம் கலந்துகொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், ரசிகர்கள் ரசிகர் மன்றத்தின் மூலம் கண்தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதேபோல் ரசிகர்கள் பலர் கண்தானம் செய்துள்ளனர். மேலும் மன்றத்தின் மூலம் கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள் சிகிச்சை பெற்று உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.