சென்னை: 'விக்ரம்' படத்தின் கதை, திரைக்கதை, வசனம் அடங்கிய ஸ்கிரிப்ட்டை இந்திய காப்புரிமை சட்டத்தின்கீழ் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பதிவு செய்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத்பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ள படம், 'விக்ரம்'. இப்படம் இந்தாண்டு ஜூன் 3ஆம் தேதி வெளியாக உள்ளது. இதற்காக விளம்பரப்படுத்தும் பணிகள் தீவிரமடைந்துள்ளன
இந்நிலையில் இப்படத்தின் கதை சமீபத்தில் கசிந்தது. அதன்படி கமல்ஹாசன் சிறைத்துறை அலுவலராகவும்; அந்த சிறையில் கொடூர கைதியாக விஜய்சேதுபதியும் இருக்கிறார் எனவும்; விஜய் சேதுபதியை தப்பிக்க வைக்க பகத்பாசில் சிறைக்குள் வருகிறார் எனவும், மூவருக்கும் இடையே நடக்கும் போராட்டம்தான் இப்படத்தின் கதை எனவும் தெரிகிறது.
இந்த நிலையில்தான் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனங்கள் அடங்கிய முழு ஸ்கிரிப்ட்டையும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இந்திய காப்புரிமைச்சட்டத்தின்கீழ் முறைப்படி பதிவு செய்துள்ளார். இதன்மூலம் இனி, யாரும் இப்படத்தின் கதை தன்னுடையது என்று உரிமை கொண்டாட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:எந்திரன் படக்கதை காப்புரிமை பிரச்னை: ஆரூர் தமிழ்நாடான் மனு தள்ளுபடி