தேமுதிக தலைவர் விஜயகாந்த் மாமல்லபுரத்தை அரசுடன் இணைந்து மக்கள் பாதுகாக்கவேண்டும் என கோரிக்கைவிடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், பல்வேறு ஒப்பந்தங்கள், உடன்படிக்கைகள் குறித்து பிரதமர் மோடியுடன் ஆலோசிக்க சீன அதிபர் தமிழ்நாட்டிற்கு வந்தார். இந்த சந்திப்பிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக சென்னை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் தூய்மைப்படுத்தப்பட்டன.
சென்னை விமான நிலையம், கிண்டி, இ.சி.ஆர், ஓ.எம்.அர், மகாபலிபுரம் உள்ளிட்ட முக்கிய பகுதிகள் அனைத்தும் வெளிநாடுகளுக்கு இணையான அளவில் சுத்தப்படுத்தப்பட்டு புதுப்பிக்கப்பட்டிருந்தன.
அதுமட்டுமின்றி, தமிழ்நாட்டின் மிக முக்கிய சுற்றுலாத் தலமான மகாபலிபுரத்தை உலகத் தரத்துக்கு மாற்ற அரசு முயற்சியெடுக்கவேண்டும் என்றும், இதற்கு மக்கள் அனைவரும் ஒண்றினைந்து சுற்றுலாத் தலங்களை அசுத்தம் செய்யாமல் இருக்க முற்படவேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 20 நாட்களுக்குப் பிறகு மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பிய மாமல்லபுரம்!