ETV Bharat / state

விஜயதசமி: குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கத் தொடங்கிய பெற்றோர்!

சென்னை: விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு இன்று ஏராளமான பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கத் தொடங்கினர்.

vijayadhasami
author img

By

Published : Oct 8, 2019, 1:36 PM IST

இந்தியா முழுவதும் உள்ள இந்து மக்களால் விஜயதசமி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் எந்தப் புதிய பணியைத் தொடங்கினாலும் அது சந்தேகத்திற்கு இடமின்றி வெற்றிபெறும் என்பது பெரும்பாலான இந்துக்களின் நம்பிக்கையாக இருக்கிறது. அதிலும், குறிப்பாக குழந்தைகளுக்கு இன்று கல்வி கற்பிக்கத் தொடங்கினால் அவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்பது நம்பிக்கை.

குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கத் தொடங்கிய பெற்றோர்!

அந்தவகையில், சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் வித்தியாரம்பம் என்னும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அப்போது குழந்தைகளின் நாக்கில் மோதிரத்தால் எழுதி பின்பு அவர்களை அரிசியில் எழுதவைப்பர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்துவிட்டு தங்களின் குழந்தைகளுக்கு கல்வியை கற்பிக்கத் தொடங்கினர். இதற்குப் பின்னரே பெரும்பாலான இந்து மக்கள் தங்களின் குழந்தைகளைப் பள்ளிகளில் சேர்ப்பர்.

இது தொடர்பாக நமது ஈடிவி பாரத் செய்திகளிடம் பேசிய முருகன் என்பவர், இதற்காக அதிகாலையிலேயே எழுந்து கோயிலுக்கு வந்ததாகவும், இன்றைய தினம் குழந்தைகளுக்கு கல்வியைத் தொடங்கினால் சிறப்பாக அமையும் என்பதால் குடும்பத்தோடு வந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: விஜயதசமியன்று மாணவர் சேர்க்கைக்காக பள்ளிகள் திறந்திருக்குமா?

Intro:சென்னை:

விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு இன்று ஏராளமான மக்கள் தங்களது குழந்தைகளுக்கு கல்வி புகட்டத் தொடங்கினர். Body:மஹிசாசுரமர்த்தினி நரகாசுரனைக் கொண்ற வெற்றியைக் குறிக்கும் விதமாக விஜயதசமி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் எந்த புதிய வேலையைத் தொடங்கினாலும் அது சந்தேகத்திற்கு இடமின்றி வெற்றி பெறும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. இன்று மக்கள் தங்களது குழந்தைகளுக்கு முதல் முதலாக கல்வி புகட்டத் தொடங்குவர். இதையொட்டி சென்னை கோடம்பாகத்தில் உள்ள ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் வித்தியாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. அங்கு குழந்தைகளின் நாக்கில் மோதிரத்தால் எழுதி பின்பு அவர்களை அரிசியில் எழுத வைப்பர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்துவிட்டு குழந்தைகளின் கல்வியைத் தொடங்கினர். இதற்குப் பின்னரே பெரும்பாலான குழந்தைகள் பள்ளிகளில் சேர்க்கப்படுவர். இது தொடர்பாக ஈடிவி பாரத் செய்திகளிடம் பேசிய முருகன், "இதற்காக அதிகாலை வேலையே கோயிலுக்கு வந்தோம். இன்றைய தினம் குழந்தைகளுக்கு கல்வியைத் தொடங்கினால் சிறப்பாக அமையும் என்பதால் குடும்பத்தோடு வந்துள்ளேன்" என்றார்.

பேட்டி: முருகன், பக்தர்
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.