ETV Bharat / state

ராஜிவ் காந்தி படுகொலை... என் அம்மாவையும் விட்டுவைக்கவில்லை: எம்.எல்.ஏ. விஜயதாரணி

குண்டு வெடிப்பிற்குப் பின் என் அம்மா சரியாக காது கேட்கும் திறனை இழந்தார். கை நடுக்கத்தால் தன் மருத்துவப் பணியை அவர் தொடர முடியாத நிலை ஏற்பட்டது. அதே போன்று தொடர்ந்து உடலில் பல பிரச்னைகள் ஏற்பட்டதால் அரசியலிலும் தொடர்ந்து அவரால் இயங்க முடியாத நிலை உருவானது.

vijayadharani
vijayadharani
author img

By

Published : May 25, 2020, 2:58 PM IST

Updated : May 27, 2020, 11:30 AM IST

தமிழ்நாடு சட்டப்பேரவையின் கடந்த கூட்டத்தொடரில் பேசிய எம்.எல்.ஏ விஜயதாரணி, “ராஜிவ் காந்தி கொல்லப்பட்டபோது அப்பாவிகளும் உயிரிழந்தனர். அவர்களுக்கு அரசு என்ன உதவிகளை செய்தது. எனது தாய் உள்பட பலர் படுகாயமடைந்தார்” என்று பேசினார். அவரது பேச்சை அடுத்து ராஜிவ் படுகொலை சம்பவத்தால் விஜயதாரணியின் தாயும் பாதிக்கப்பட்டிருப்பது பரவலாக தெரிய ஆரம்பித்தது.

இந்திய வரலாற்றில் சில மறக்க முடியாத தேதிகள் உண்டு. அப்படிப்பட்ட தேதி மே.21. இந்தத் தேதி இந்தியாவிற்கு மிகப்பெரிய கருப்பு நாளாகவே அமைந்திருக்கிறது. மே.21 என்று கேட்டாலே பலரது உடல்கள் நடுங்கும், கோர சத்தங்கள் அவர்கள் செவியில் எழுந்து கண்களிலிருந்து தாரைத் தாரையாக கண்ணீர் ஊற்றும்.

ராஜிவ் காந்தி மரணம். ஒருவரின் உயிரை எடுப்பதற்கு, ஏராளமானோரின் உயிர்களை பலி வாங்கிய சம்பவம். அவரது மரணத்தை சுற்றி அவிழ்க்கப்படாத முடிச்சுகள் இன்றளவும் இருக்கின்றன. ராஜிவ் மரணம் ஏழு பேரோடு சுருங்கி நிற்கிறது.

மருத்துவர் பகவதி
மருத்துவர் பகவதி

ஆனால், அவர் மரணத்தில் இருக்கும் அரசியல் சாயத்தைத் துடைத்துவிட்டு பார்த்தால், 14 பேரின் உயிர்கள் தேவையில்லாமல் எடுக்கப்பட்டிருக்கிறது. அவர்களது குடும்ப நிலை தற்போது என்னவென்று யாருக்கும் தெரியவில்லை. 40க்கும் மேற்பட்டோர் தங்களது வாழ்க்கையை மிகுந்த காயங்களுக்கு இடையில் நகர்த்தி கொண்டிருக்கிறார்கள்.

இந்தத் துன்பியல் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட ஏறத்தாழ 40க்கும் மேற்பட்டோர் இந்திய சமூகத்தால் மறக்கப்பட்டிருக்கிறார்கள்.

அப்படி மறக்கப்பட்ட அல்லது மறைக்கப்பட்டவர்களில் தற்போதைய காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணியின் தாயும் ஒருவர். ஆம், விஜயதாரணியின் தாய் பகவதி, காங்கிரஸில் தீவிரமாக களமாடியவர். அதுமட்டுமின்றி மருத்துவரும்கூட. ராஜிவ் கொலை நடந்த சமயத்தில், அந்த இடத்தில் இருந்தவர்.

விஜயதாரணி குடும்பம்
விஜயதாரணி குடும்பம்

குண்டு வெடிப்பில் ஏற்பட்ட படுகாயத்தால், கேட்கும் திறனை இழந்து, மனதை விட்டு அகலாத அந்தப் பயமும், பதற்றமும் அவரது கைகளை நடுங்கச் செய்து, மருத்துவத் துறையிலிருந்து அவரை வெளியேற்றியிருக்கிறது.

எப்படி இருக்கிறார் பகவதி, இந்த சம்பவம் அவரது வாழ்க்கையை எப்படி புரட்டி போட்டிருக்கிறது என்பது குறித்து அறிய அவருடைய மகளும், எம்.எல்.ஏவுமான விஜயதாரணியைச் சந்தித்தோம். விஜயதாரணியின் குரலில் இன்னமும் அந்த ரணம் ஆறாமல் இருக்கிறது.

மனதைத் தேற்றிக்கொண்டு பேச ஆரம்பித்தார் விஜயதாரணி, “நான் இதைப் பற்றி பெரிதாக எங்கேயும் பேசியது இல்லை. நம் கஷ்டம் நம்மோடு போகட்டும் என இருந்தேன். ஏன், இது கட்சியில்கூட பலரும் அறியாத விஷயம். என் தாயார் பகவதி பத்மநாபன் 1990களில் மகளிர் காங்கிரஸில் செயல்பட்டு வந்தவர்.

கட்சி பணிகளில் மிகுந்த ஈடுபாடுடன் இருந்த அவர், ஒரு மகேப்பேறு மருத்துவரும்கூட. அவரின் வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றி அமைத்தது 1991 ராஜிவ் காந்தி மரணம்.

விஜயதாரணி
விஜயதாரணி

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி, தேர்தல் பிரசாரத்திற்காக ஸ்ரீபெரும்பதூர் பகுதிக்கு வந்தபோது என் அம்மாவும் அங்கு பணிகளை கவனித்து வந்தார். ராஜிவ் காந்தி வந்தவுடன் அவரை வரவேற்று மற்ற வேலைகளை பார்க்க தொடங்கிவிட்டார். அப்போதுதான் அந்த கொடூர நிகழ்வு நடைபெற்றது.

அதன் பின்னர் என்ன நடந்தது என்று உணர என் அம்மா மிகுந்த சிரமப்பட்டுள்ளார். இது ஒரு புறம் என்றால், ஏதோ அசம்பாவிதம் நடைபெற்றது என்பதை அறிந்து வீட்டில் இருந்த நாங்கள் மிகுந்த பயம் அடைந்தோம். என்ன நடக்கிறது, யாரை அழைப்பது என்று தெரியவில்லை.

எம்.எல்.ஏ. விஜயதாரணி

வீட்டில் நாங்கள் மூன்று பெண்கள், என் தந்தை எனக்கு 9 வயது இருக்கும்போதே இறந்துவிட்டார். அதன் பின்னர் எங்கள் அம்மாதான் எங்களை இந்த அளவிற்கு ஆளாக்கினார்.

குண்டு வெடிப்பிற்குப் பின் என் அம்மா சரியாக காது கேட்கும் திறனை இழந்தார். கை நடுக்கத்தால் தன் மருத்துவப் பணியை அவர் தொடர முடியாத நிலை ஏற்பட்டது. அதே போன்று தொடர்ந்து உடலில் பல பிரச்னைகள் ஏற்பட்டதால் அரசியலிலும் தொடர்ந்து அவரால் இயங்க முடியாத நிலை உருவானது.

என் அம்மாவால் சட்டப்பேரவை உறுப்பினராகக்கூட ஆக முடியவில்லை என்ற வருத்தம் எனக்கு இருந்தது. நான் முதல் முதலில் எம்.எல்.ஏ., ஆனபோது அவரது மகிழ்ச்சி அளவிட முடியாதது. எனக்கு எம்.எல்.ஏ சீட் கிடைத்த உடன் அவர் கூறிய வார்த்தைகள், ’தோல்வி என்ற பேச்சுக்கே இடமில்லை வெற்றிதான். அதன் பின் மக்களுக்கு நன்றாக உதவு’ என தெரிவித்தார்.

பகவதி அம்மா
பகவதி அம்மா

ராஜிவ் காந்தி குண்டு வெடிப்பினால் பலரின் வாழ்க்கை முற்றிலும் மாறியுள்ளது. ஏழு பேர் விடுதலை பற்றி பேசும் திராவிட கட்சிகள் பாதிக்கப்பட்ட குடும்பங்களை பற்றி ஏன் பேசுவதில்லை என்ற கேள்வியை நான் கடந்த சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் எழுப்பினேன்.

மேலும் 29 வருடங்கள் ஆகியும் இன்றளவும் ராஜிவ் காந்தியுடன் மரணித்த காவல் துறையினருக்கு ஏதும் செய்யவில்லை, அரசு அவர்களுக்கு உதவ வேண்டும் எனவும் அப்போது பேசினேன். இதனால் பல குழந்தைகள் அனாதை ஆக்கப்பட்டுள்ளனர். பலர் வாழ்க்கையை தொலைத்துள்ளனர்.

பலரும் பலவற்றை கூறலாம், ஆனால் வன்முறை எதற்கும் தீர்வாகாது” என்று அவர் பேசி முடிக்கையில் அவரது தாய்க்கு ஏற்பட்ட காயத்தை ஆற்ற முடியாத துயரக் கோடுகள் தெரிந்தன.

Last Updated : May 27, 2020, 11:30 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.