ETV Bharat / state

விஜய் சேதுபதி தொடர்ந்த வழக்கு ஒத்திவைப்பு - Vijay Sethupathi case adjourned in chennai high court

நடிகர் விஜய் சேதுபதி தொடர்ந்த வழக்கு விசாரணையை வரும் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி
author img

By

Published : Jan 7, 2022, 3:37 PM IST

சென்னை: சைதாப்பேட்டையைச் சேர்ந்த மகா காந்தி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விஜய் சேதுபதிக்கு எதிராக மனு ஒன்றைத் தாக்கல்செய்தார். அதில், "மருத்துவப் பரிசோதனைக்காக நவம்பர் 2ஆம் தேதி இரவு பெங்களூரு விமான நிலையத்திற்குச் சென்றிருந்தேன்.

அங்கு நடிகர் விஜய் சேதுபதியை எதிர்பாராதவிதமாகச் சந்தித்தேன். திரைத் துறையில் அவரின் சாதனைகளைப் பாராட்டி நான் வாழ்த்துத் தெரிவித்தேன். ஆனால் அதனை ஏற்க மறுத்த விஜய் சேதுபதி பொதுவெளியில் என்னை இழிவுப்படுத்திப் பேசியதுடன், என் சாதி குறித்து தவறாகப் பேசினார்.

மறுநாள் ஊடகங்களில் தான் தாக்கப்பட்டதாக விஜய் சேதுபதி தரப்பில் அவதூறு பரப்பப்பட்டது. என் மீது தவறான வதந்தி பரப்பிய விஜய் சேதுபதி, அவரது மேலாளர் ஜான்சன் ஆகியோர் மீது குற்றவியல் அவதூறுச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இவ்வழக்கை விசாரித்த சென்னை சைதாப்பேட்டை ஒன்பதாவது பெருநகர உரிமையியல் நீதிமன்றம், நடிகர் விஜய் சேதுபதி, அவரது மேலாளர் ஜான்சன் ஆகியோர் ஜனவரி 4ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டிருந்தது. இதனிடையே தனக்கு அனுப்பட்ட அழைப்பாணைய ரத்துசெய்யக் கோரியும், வழக்கை ரத்துசெய்யக் கோரியும் விஜய் சேதுபதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு இன்று (ஜனவரி 7) நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது விஜய் சேதுபதி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நர்மதா சம்பத், "பெங்களூரு எல்லை தொடர்புடைய வழக்கை சென்னையில் தொடர்ந்தது, அதை சைதாப்பேட்டை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது, இயந்திரத்தனமாக உடனடியாக அழைப்பாணை அனுப்பியது, சமரசம் ஏற்பட்டதை மறைத்து அவதூறு வழக்கு என அடுத்தடுத்த தவறுகள் நடந்துள்ளன.

விளம்பர நோக்கத்துடன் மூன்று கோடி ரூபாய் இழப்பீடு கேட்டுள்ளதால், அதிகப்படியான அபராதத்துடன் அந்த வழக்கை ரத்துசெய்ய வேண்டும். மேலும் வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முன்பாகவே பதில் மனு தாக்கல்செய்துள்ளனர்" என வாதிட்டர்.

மகா காந்தி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இன்பேன்ட் தினேஷ், "நோட்டீஸ் வந்ததால்தான் பதில் மனு தாக்கல்செய்தோம். விளம்பரத்திற்காகத் தொடரப்பட்ட வழக்கு இது அல்ல. விஜய் சேதுபதியும் அவரது மேலாளரும் தாக்கியதால்தான் வழக்குத் தொடரப்பட்டது" என விளக்கம் அளித்தார். இதனையடுத்து வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை ஜனவரி 11ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்துள்ளார்.

இதையும் படிங்க: மகேஷ் பாபு நடித்து வரும் திரைப்படத்தின் படப்பிடிப்பு தள்ளிவைப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.