சென்னை: நடிகர் விஜய் சினிமாவை தொடர்ந்து விரைவில் அரசியலில் கால் பதிப்பார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. அதற்கு ஏற்றார் போல கடந்த சில மாதங்களாக விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக பல முன்னேற்பாடுகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த இப்படம் வசூல் ரீதியாக வெற்றி படமாக அமைந்தது. இதன் வெற்றி விழா சமீபத்தில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் குட்டி ஸ்டோரி சொல்லி ரசிகர்களை கவர்ந்தார் நடிகர் விஜய்.
கடந்த சில மாதங்களாக விஜய் தனது விஜய் மக்கள் இயக்கம் மூலம் ஏராளமான நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறார். விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளராக புஸ்ஸி ஆனந்த் தலைமை வகித்து வருகிறார். இந்நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில அணிகளின் நிர்வாகிகள் கூட்டம், லியோ படத்தின் வெற்றி விழா என தொடர் நிகழ்ச்சிகள் நடைபெற்றது வந்தன.
கடந்த நவம்பர் ஒன்றாம் தேதி மாலை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் லியோ படத்தின் சக்ஸஸ் மீட் நடைபெற்றது. லியோ படத்தின் வெற்றி விழா கொண்டாட்டத்தில் பல்வேறு ஒருங்கிணைப்புப் பணிகளை தளபதி புஸ்ஸி ஆனந்த் செய்துவந்தார். இதனால் ஏற்பட்ட அயற்சி மற்றும் சோர்வின் காரணமாக புஸ்ஸி ஆனந்த் இன்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவரை மருத்துவமனைக்கு சென்று நடிகர் விஜய் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். உடல் சோர்வு காரணமாகதான் புஸ்ஸி ஆனந்திற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும் தற்போது அவர் நலமாக உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மருத்துவமனைக்கு விஜய் சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: தளபதி 68 படப்பிடிப்புக்காக தாய்லாந்திற்கு சென்ற நடிகர் விஜய்! வீடியோ வைரல்!