ETV Bharat / state

முகமது ஷமியிடம் பீஸ்ட் அப்டேட் கேட்ட விஜய் ரசிகர்கள் - பீஸ்ட் அப்டேட்

நடிகர் விஜய் நடிப்பில் ‘பீஸ்ட்’ படம் வெளியாகவுள்ள நிலையில், நேற்று நடந்த கிரிக்கெட் போட்டியில் கலந்துகொண்ட முகமது ஷமியிடம், விஜய் ரசிகர்கள் பீஸ்ட் அப்டேட் கேட்ட காணொளி வைரலாகி வருகிறது.

ஷமியிடம் பீஸ்ட் அப்டேட் கேட்ட ரசிகர்கள்
ஷமியிடம் பீஸ்ட் அப்டேட் கேட்ட ரசிகர்கள்
author img

By

Published : Mar 15, 2022, 12:21 PM IST

நடிகர் அஜித் நடிப்பில் உருவான ‘வலிமை’ படம் நீண்ட எதிர்பார்ப்புக்குப்பின், கடந்த 24ஆம் தேதி வெளியானது. அப்படம் வெளியாவதற்கு முன்பு, கடந்த இரண்டு ஆண்டுகளாக அஜித் ரசிகர்கள், பொது இடங்களில் பிரபலங்களிடம் ‘வலிமை’ பட அப்டேட் கேட்டு வந்த விஷயம் வைரலானது.

குறிப்பாக கடந்தாண்டு சென்னை சேப்பாக்கத்தில், இந்தியா - இங்கிலாந்து இடையே நடைபெற்ற டெஸ்ட் போட்டியில், பீல்டிங் செய்துகொண்டிருந்த இங்கிலாந்து ஆல் ரவுண்டர் மொயீன் அலியிடம், அஜித் ரசிகர்கள் ‘வலிமை’ பட அப்டேட் கேட்டது வைரலானது.

இதேபோல், இந்திய அணி வீரர் அஷ்வினிடமும் அஜித் ரசிகர்கள் ‘வலிமை’ பட அப்டேட் கேட்டு இண்டர்நேஷனல் ட்ரெண்டிங் ஆக்கினர். இந்நிலையில், இலங்கைக்கு எதிராக பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்று வந்த 2ஆவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி வீரர் முகமது ஷமிடம் விஜய் ரசிகர்கள் சிலர் ‘பீஸ்ட்’ பட அப்டேட் கேட்டது வைரலாகியுள்ளது.

ஷமியிடம் பீஸ்ட் அப்டேட் கேட்ட ரசிகர்கள்

நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பீஸ்ட்’. இந்தப்படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்க, செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்திருக்கும் இந்தப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

சமீபத்தில் இந்தப்படத்திலிருந்து வெளியான அரபிக் குத்து பாடல், யூ-டியூப்பில் பல்வேறு சாதனைகளை செய்து வருகிறது. அடுத்த மாதம் ‘பீஸ்ட்’ படம் வெளியாகவுள்ள நிலையில், இன்னும் டீசர் வெளியாகவில்லை. மேலும், ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி இருக்கிறதா? இல்லையா? என விஜய் ரசிகர்கள் குழம்பிப்போய் உள்ளனர்.

இந்நிலையில், நேற்று நடந்த டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய அணி வீரர் முகமது ஷமி பீல்டிங் செய்து கொண்டிருந்தபோது, ‘ஷமி பாய், ‘பீஸ்ட்’ அப்டேட் என்று ரசிகர்கள் கேட்ட சம்பவத்தின் வீடியோ வைரலாகியுள்ளது.

இதையும் படிங்க: 'மாமன்னன்' படப்பிடிப்பில் இணைந்த வடிவேலு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.