தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் விருகம்பாக்கம் பகுதியில் வாக்கு சேகரித்தார். அப்போது, 50க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் ஜெயலலிதா முகமூடி அணிந்து இரட்டை இலை சின்னத்தில் வாக்கு கேட்டனர்.
அப்போது, வேட்பாளர் ஜெயவர்தன் நம்மிடையே பேசுகையில், "தேர்தல் நெருங்கும் இந்த நேரத்தில் மக்கள் ஆதரவு எங்களுக்கு பெருகி வருகிறது. தமிழக மக்களுக்காக நாங்கள் நிறைய செய்துள்ளோம். குறிப்பாக மத்திய அரசின் உதவியுடன் எனது தொகுதியில் நிறைய வளர்ச்சி திட்டங்கள் செய்து முடிக்கப்பட்டுள்ளது. பல திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது. அனைத்து தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி நிச்சயமாக வெல்லும்", என்றார்.