ETV Bharat / state

ஜெய்பீம் பட விவகாரம்; காவல் ஆணையர் அலுவலகம் முற்றுகை - சென்னை விடுதலை வேங்கைகள் கட்சியினர் போராட்டம்

ஜெய்பீம் பட விவகாரத்தில் குறவர் சமூகத்தினரை கொச்சைப்படுத்தும் விதமாக பேசியவர்களை கைது செய்யக்கோரி விடுதலை வேங்கை கட்சியினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

காவல் ஆணையர் அலுவலகம் முற்றுகை
காவல் ஆணையர் அலுவலகம் முற்றுகை
author img

By

Published : Nov 26, 2021, 7:14 PM IST

சென்னை: வேப்பேரியில் அமைந்துள்ள காவல் ஆணையர் அலுவலகத்தின் 3-வது வாயிலின் உள்ளே திடீரென 30-க்கும் மேற்பட்டோர் கூச்சலிட்டு கொண்டே முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல் துறையினர் உடனடியாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் வெளியே தள்ளி கதவை மூடினர். இதனால் காவல் துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதையடுத்து செய்தியாளர்களிடம் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை வேங்கைகள் கட்சித் தலைவர் அரிகிருஷ்ணன் பேசியதாவது, "சமீபத்தில் வெளியான ஜெய்பீம் திரைப்படத்தில் வரக்கூடிய ராஜகண்ணு கதாபாத்திரத்தை மையப்படுத்தி, குறவர் சமூகத்தினர் குறித்து தரக்குறைவாக மருது சேனைத் தலைவர் ஆதிநாராயணன், நேதாஜி மக்கள் கழகம் தலைவர் வரதராஜன் ஆகியோர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர். அவர்களை உடனடியாக வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தி ஏற்கனவே விடுதலை வேங்கைகள் கட்சி சார்பாக பல மாவட்டங்களில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

காவல் ஆணையர் அலுவலகம் முற்றுகை

இதனால் உடனடியாக ஆதிநாராயணன், வரதராஜன் ஆகியோரை வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்யக்கோரி விடுதலை வேங்கைகள் கட்சி சார்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்தோம். ஆனால் புகாரை வாங்க மறுத்ததால் போராட்டத்தில் ஈடுபட்டோம்" என்றார்.

இதனையடுத்து காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் இருவரை மட்டும் அழைத்து புகார் அளிக்க அனுப்பினர்.

இதையும் படிங்க: உடலில் பெயிண்ட் ஊற்றிக் கொண்டு உதயநிதி படம் வரைந்த ஓவிய ஆசிரியர்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.