ETV Bharat / state

விடுதலை பாகம் 1 முன்பதிவு தொடங்கியது! - new updates

வெற்றிமாறன் இயக்கத்தில், சூரி நடிப்பில் உருவாகியுள்ள விடுதலை பாகம் 1, வரும் 31ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதால் இதற்கான முன் பதிவு தொடங்கியுள்ளது.

viduthlai movie part 1 ticket booking started
விடுதலை பாகம் 1 முன்பதிவு தொடங்கியது!...
author img

By

Published : Mar 26, 2023, 12:38 PM IST

சென்னை: இயக்குநர் வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகியுள்ள, விடுதலை பாகம் 1 படத்திற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. இப்படத்தை, ஆர்எஸ் இன்போடைன்மென்ட், எல்ரெட் குமார் தயாரித்துள்ளார். மேலும், இந்தப் படம் ஜெயமோகன் எழுதிய துணைவன் என்ற சிறுகதையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

ஆடுகளம், விசாரணை போன்ற வெற்றிப் படங்களுக்கு தேசிய விருதுகளை பெற்ற வெற்றிமாறன், தற்போது சூரியை கதையின் நாயகனாக கொண்டு உருவாக்கும் விடுதலை படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. மேலும், வட சென்னை படத்திற்குப் பிறகு, அதன் இரண்டாம் பாகம் எப்போது என்ற‌ எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது மற்றுமொரு இரண்டு பாகங்களைக் கொண்ட திரைப்படத்தை எடுத்து வெளியீட்டுக்கு தயாராகியுள்ளார், வெற்றிமாறன்.

விடுதலை படத்தின் கதை நாயகனாக சூரி இதில் காவலராக நடித்துள்ளார். மேலும் வாத்தியார் என்ற முக்கிய கதாப்பாத்திரத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ளார்.சிறிய முதலீட்டில் தொடங்கப்பட்ட இப்படம் அப்படியே பெரிய படமாக மாறிவிட்டது. இதற்காக, சிறுமலை பகுதியில் பலநாட்கள் தங்கி படம் பிடித்துள்ளனர்.

மேலும், ரூ.4 கோடியில் தொடங்கப்பட்ட இப்படத்தின் பட்ஜெட், தற்போது 40 கோடியைத் தாண்டியுள்ளது. இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் வருகின்ற 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதனைத்தொடர்ந்து சில மாதங்களில் இரண்டாவது பாகம் வெளியாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். மேலும், இப்படத்தில் இடம் பெற்ற காட்டுமல்லி, ஒன்னோடு நடந்தா ஆகிய பாடல்கள் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளன. இத்தனை ஆண்டுகள் கடந்தும், ரசிகர்கள் விரும்பும் பாடலை கொடுத்து வருகிறார் இளையராஜா என்று சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

வெற்றிமாறன் இயக்கம் என்பதாலும், முதல்முறையாக சூரி கதையின் நாயகனாக நடித்துள்ளார் என்பதாலும், இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. எப்போதும், நல்ல கதைகளை தேர்வு செய்து படம் எடுப்பவர், வெற்றிமாறன். எனவே, இப்படமும் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்தின், ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய வெற்றிமாறன், விடுதலை இரண்டு பாகங்களையும் முடித்துவிட்டு‌, சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தை இயக்க உள்ளதாகத் தெரிவித்தார். மேலும், அதனைத்தொடர்ந்து வடசென்னை இரண்டாம் பாகம் எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இச்செய்தி, தனுஷ் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: SK 21 - காஷ்மீரில் லொகேஷன் தேடும் சிவகார்த்திகேயனின் படக்குழு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.