ETV Bharat / state

விருதுநகர் வனப்பகுதிகளில் வேட்டை நாய்களால் வனவிலங்குகள் கொல்லப்படுகிறதா? வனவிலங்கு ஆர்வலர்கள் ஆவேசம்!

Rajapalayam dog: ராஜபாளையம் மற்றும் விருதுநகர் ஆகிய வனப்பகுதிகளில் வேட்டைநாய்களை வைத்து வனவிலங்கு வேட்டையாடும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியான நிலையில், இதனை தடுக்க தமிழ்நாடு வனத்துறை விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 23, 2023, 5:06 PM IST

Updated : Dec 23, 2023, 5:38 PM IST

வேட்டை நாய்களை வைத்து வேட்டையாடப்படும் வனவிலங்குகள்

சென்னை: தமிழ்நாடு, சுமார் 22 ஆயிரத்து 877 ச.கி.மீ பரப்பளவில் வனப்பகுதியைக் கொண்டுள்ளது. இந்த பரப்பளவு, தமிழ்நாட்டு புவிப் பரப்பளவில் 17.59 சதவீதம் ஆகும். இந்த வனப்பகுதிகளில் குறிப்பாக மேகமலை, முண்டந்துறை, முதுமலை, ஆனைமலை உள்ளிட்ட பகுதிகளில் புலிகள் காப்பகம் உள்ளன. குறிப்பாக, மேகமலை பகுதி பாதுகாக்கபட்ட வனப்பகுதியாக கருதப்பட்டு வருகிறது.

இதையடுத்து 1988ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூரை தலைமை இடமாகக் கொண்டு, சாம்பல் நிற அணில்கள் சரணாலயத்தை அறிவித்தது, தமிழ்நாடு அரசு. இங்கு சாம்பல் நிற அணில்கள், காட்டெருமை, யானை, மான், கரடி, சிங்கவால் குரங்குகள், காட்டுப்பன்றிகள், புள்ளி மான்கள், வரையாடுகள் போன்ற பல்லுயிர்கள் உள்ளன. அதைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகளவில் இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், சிறுத்தைகள் மற்றும் புலிகளை பாதுகாப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வந்தன.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் சிறுத்தைகளின் உயிரிழப்பு அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில், நீலகிரி மாவட்டத்தில் சிறுத்தை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, வனவிலங்குகளான புனகு பூனை, காட்டுப்பன்றி, கழுதைப்புலி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் வேட்டை நாய்கள் மூலம் வேட்டையாடப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதேபோல், வேட்டை நாய்கள் கொண்டு வனவிலங்குகளை வேட்டையாடுவோர் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என வனத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில், ராஜாபாளையம் பகுதிகளில் வேட்டை நாய் வைத்து வனவிலங்குகளை வேட்டையாடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பாடல், வேட்டை, குடி போன்ற வசனங்களுடன் பதிவு செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து வனவிலங்கு ஆர்வலர் ஒருவர் கூறுகையில், "தமிழ்நாட்டில் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. குறிப்பாக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் வேட்டை நாய்களை வைத்து வனவிலங்கை வேட்டையாடுகின்றனர்.

இதில், சமீபத்தில் சிறுத்தையை ஒரு வேட்டை நாய் வேட்டையாடும் வீடியோ ஒன்று வெளிவந்தது. மேலும், ஒரு புனகுபூனையை வேட்டை நாய்களை வைத்து வேட்டையாடும் வீடியோவும் உள்ளன. புனகு பூனை என்பது, பாதுகாக்கபட்ட வனவிலங்கு பட்டியலில் (Schedule 1) உள்ளன. இதேபோல், சிறுத்தையும் இந்த பட்டியலின் கீழ் உள்ளன. இது மட்டுமின்றி, வனப்பகுதியில் அரிதாக காணப்படும் கழுதைப்புலியை வேட்டையாடுதல் போன்றவையும் தற்போது அதிகமாக நடைபெற்று வருகின்றன.

தொடர்ந்து பல வருடமாக இது போன்ற சம்பவங்கள் தமிழ்நாட்டில் நடைபெற்று வருகிறது. இது குறித்து சம்பந்தபட்ட துறை அதிகாரிகளிடம் பல முறை நாங்கள் புகார் கொடுத்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குறிப்பாக, தமிழ்நாட்டில் வேட்டை தடுப்பு பிரிவினர்கள், இது போன்ற சம்பவத்தை கண்டுகொள்வதில்லை.

மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்பு நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி பகுதியில், ஒரு சிறுத்தையைக் கொன்று அதன் 3 கால்களை நகங்களுக்காக வெட்டி எடுத்துச் சென்றிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. குறிப்பாக சத்தியமங்கலம் பகுதியில் பாதுகாக்கபட்டு வரும் ஆமைகளை சமைப்பது போன்ற வீடியோக்கள் சமூகவலைத்தளத்தில் பதிவிடப்படுவது அதிர்ச்சி அளிக்கின்றது. தமிழ்நாட்டில் வனவிலங்கு வேட்டையாடுதல் அதிகமாகி வருகின்றன. எனவே, இதற்கு வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஆத்தூர் வெற்றிலைக்கு வந்த சோதனை.. கனமழையால் சேதம்.. வாழ்வாதாரம் காக்க விவசாயிகள் கோரிக்கை!

Last Updated : Dec 23, 2023, 5:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.