ETV Bharat / state

செவிலியர் ஆப்ரேஷன் செய்த வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு

பிரசவ அறுவை சிகிச்சையை கவனக்குறைவாக மேற்கொண்ட அரசு மருத்துவர் மற்றும் செவிலியர் மீது நடவடிக்கை எடுக்கவும், 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடக் கோரிய வழக்கில், தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசு பதிலளிக்க உத்தரவு
அரசு பதிலளிக்க உத்தரவு
author img

By

Published : Mar 5, 2022, 8:21 PM IST

சென்னை: சேலம் மாவட்டம், பூசாரிவளவு கிராமத்தைச் சேர்ந்த கே.சகுந்தலா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், "நான் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தபோது, டிசம்பர் 16ஆம் தேதி 2020ஆம் ஆண்டு எடப்பாடி அருகே உள்ள ராயனம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டேன். சுகப் பிரசவம் என்ற நிலை இருந்தும், தொலைப்பேசி மூலம் மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற செவிலியர், தனக்கு அறுவை சிகிச்சையை மேற்கொண்டார்.

மேலும், உரிய அனுபவம் எதுவும் இல்லாமல் நான்காம் தர சிகிச்சை, பெருங்குடல் வாய், சுருக்குதசை ஆகிய பகுதிகளில் ஆழமாக வெட்டப்பட்டது போன்ற காரணங்களால் அதிக அளவு ரத்தப்போக்கு ஏற்பட்டு, மிகவும் பலவீனமடைந்துள்ளேன். இதனால், சம்மந்தப்பட்ட ஆரம்ப சுகாதார மையத்தின் மருத்துவர், செவிலியர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனுவை இன்று (மார்ச் 5) விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், பொது சுகாதாரத்துறை இயக்குநர், சேலம் மாவட்ட பொது சுகாதாரத்துறை துணை இயக்குநர் ஆகியோரை தாமாக முன்வந்து வழக்கில் சேர்க்க உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கு குறித்து தமிழ்நாடு அரசு பதிலளிக்கவும் உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 29ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

இதையும் படிங்க: டாஸ்மாக் பார் ஆக மாறிய கால்நடை மருத்துவமனை!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.