ஜார்கண்ட் (ராஞ்சி): மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் இருந்து மும்பை நோக்கிச் சென்று கொண்டிருந்த ஹவுரா- சிஎஸ்எம்டி எக்ஸ்பிரஸ் (Train No - 12810) ரயில் பெட்டிகள் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், இதுவரை இருவர் உயிரிழந்துள்ள நிலையில் 6 பயணிகள் காயமடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
18 பெட்டிகளைக் கொண்ட ஹவுரா சிஎஸ்எம்டி எக்ஸ்பிரஸ் சக்ரதர்பூர் அருகே ராஜ்கர்ஸ்வான் வெஸ்ட் அவுட்டர் மற்றும் சக்ரதர்பூர் பிரிவில் உள்ள பாரபாம்பூ இடையே சென்று கொண்டிருந்தபோது, அதிகாலை 3.45 மணியளவில் எதிர்பாராதவிதமாக 3 ரயில் பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
Jharkhand: Train No. 12810 Howara-CSMT Express derailed near Chakradharpur, between Rajkharswan West Outer and Barabamboo in Chakradharpur division at around 3:45 am. ARME with Staff and ADRM CKP on site. 6 persons have been injured. All have been given first aid by the Railway… pic.twitter.com/dliZBvtoFk
— ANI (@ANI) July 30, 2024
இந்த விபத்தில் இரு பயணிகள் உயிரிழந்த நிலையில், 20க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மேலும் பலர் காயமடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தகவலறிந்து வந்த அதிகாரிகள், ரயில்வே ஊழியர்களுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மேலும், காயமடைந்த பயணிகளுக்கு ரயில்வே மருத்துவ குழுவினர் உடனடியாக முதலுதவி அளித்து, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளதாக இந்திய ரயில்வே தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
Due to derailment of 12810 Howrah-Mumbai mail, 5 trains cancelled and 4 short terminated/short originated: South Eastern Railway pic.twitter.com/xo9geBy6ro
— ANI (@ANI) July 30, 2024
ரயில் சேவை ரத்து: இந்த விபத்து காரணமாக 5 ரயில் சேவைகளை ரத்து செய்துள்ளது. மேலும், 4 ரயில்களை முந்தைய ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது என தென்கிழக்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதாவது,
ஹவுரா - திட்லாகர் - கண்டபாஜி எக்ஸ்பிரஸ் (22861), காரக்பூர் - தன்பாத் எக்ஸ்பிரஸ் (08015/18019), ஹவுரா - பார்பில் - ஹவுரா ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ் (12021/12022), டாடாநகர் - இத்வாரி எக்ஸ்பிரஸ் (18109) மற்றும் ஷாலிமார் - எல்டிடி எக்ஸ்பிரஸ் (18030) ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
#WATCH | Jharkhand: Train No. 12810 Howara-CSMT Express derailed near Chakradharpur, between Rajkharswan West Outer and Barabamboo in Chakradharpur division at around 3:45 am.
— ANI (@ANI) July 30, 2024
Two people have lost their lives so far.
( Latest Visuals from the spot) pic.twitter.com/qYAmk2bpEg
உதவி எண்கள் அறிவிப்பு:
- மும்பை - 022-22694040
- புசாவல் - 08799982712
- நாக்பூர் - 7757912790
- டாடா - 0657-2290324
- சக்ரதர்பூர் - 06587-238072 & 4060620606060
- ஜார்சுகுடா - 06645-272530
- ஹவுரா - 9433357920 & 033-26382217
- ஷாலிமார் - 7595074427 & 6295531471
- காரக்பூர் - 03222-293764
இதையும் படிங்க: திருச்சியில் ஆசிரியரை அரிவாளால் வெட்டிய மாணவன்..வகுப்பறையில் நடந்த கொடூர சம்பவம்!