இந்தியாவில் கரோனா தொற்று ஏற்பட்ட நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்க சுவாச கருவியான வெண்டிலேட்டா்கள் முக்கியத் தேவையாகும். இது தற்போது போதியளவு இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளன. எனவே, மத்திய அரசு நாட்டில் உள்ள பெரிய தொழிற்கூடங்களை வெண்டிலேட்டா்களை தயாரிக்கும்படி அறிவுறுத்தியுள்ளது.
இதைத்தொடர்ந்து, தமிழ்நாட்டில் சென்னையை ஒட்டியுள்ள ஒரகடம், ஶ்ரீபெரும்புத்தூா், மறைமலைநகா் உள்ளிட்ட சில பகுதிகளில் உள்ள பெரிய நிறுவனங்கள் வெண்டிலேட்டா்களைத் தயாரிக்கும் பணிகளைத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதற்கு தேவையான உபகரணங்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்துகொள்ள மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. அதன்பேரில் சீனா,மலேசியா,பிலிப்பைன்ஸ்,மெக்சிகோ ஆகிய நாடுகளிலிருந்து வெண்டிலேட்டா்கள் தயாரிப்பதற்கான உபகரணங்கள், 154 பாா்சல்கள் சரக்கு விமானம் மூலம் சென்னை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வந்தன.
அதோடு அமெரிக்காவிலிருந்து கைகளில் அணியும் நவீன உறைகளின் மாடல்கள் ஒரு பாா்சலும் வந்தது. இவற்றை சென்னை விமான நிலைய சுங்கத்துறை கொரியா் முனைய அலுவலர்கள் உடனடியாக கிளியா் செய்து, டெலிவரிக்குக் கொடுத்தனுப்பினா்.