சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர், இசையமைப்பாளர் என பன்முகத் தன்மையுடன் வலம் வருபவர் ஜி.வி பிரகாஷ் குமார். இவரது படங்களின் கதைகள் சமீபகாலமாக இணையத்தில் டிரெண்ட்டில் இருக்கும் 2k கிட்ஸ் கதைகளை மையமாக வைத்து படங்கள் பெரும்பாலும் இருக்கும். இவரது நடிப்பில் இறுதியாக வெளிவந்த “பேச்சுலர்” திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று, பரவலான வெற்றியைத் தேடி தந்தது.
அந்த வகையில், இவர் நடித்துள்ள திரைப்படமான “அடியே” படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், படத்தின் நடிகை கெளரி கிஷன், இயக்குநர்கள் மிஷ்கின், கார்த்திக் சுப்பராஜ், வெங்கட் பிரபு, வசந்த பாலன், சிம்பு தேவன், அருண் மாதேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் மிஷ்கின் மேடையில் பேசியபோது, "இந்த படத்தின் ட்ரெய்லரில், மிஷ்கின் கதாபாத்திரம் போன்று சித்தரிக்கப்பட்ட கதாபாத்திரம் ஒன்று காட்டப்பட்டிருக்கும். மேலும், பேசுகையில் இந்த படத்தில் நான் நடித்திருக்கிறேனா? என்று கேட்டுவிட்டு பேசத் தொடங்கினார்.
ஒரு இயக்குநர், ஒரு கதாபாத்திரத்தை எப்படி வேண்டுமானாலும் காட்ட முடியும், என்னை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் காட்டலாம் என்று ஆபாச வார்த்தையுடன் மேடையில் பேசினார். மேலும், தற்போது இயக்குநருக்கு முழு சுதந்திரம் கிடைத்துள்ளது யாரை எப்படி வேண்டுமானாலும் காட்டலாம் என்றார்.
அதே போல், என் படத்தின் கதாபாத்திரத்திற்கு இளையராஜா என்ற பெயர் தேவைப்படுகிறது அதை வைக்க முடியாது வைத்தால் என் அப்பா கோபித்துக் கொள்வார் என்றார். சில தவிர்க்க முடியாத நடிகர்களுள் ஒருவராக இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். அவரது மனைவி எனது படத்தில் அழகான பாடல் பாடி உள்ளார் என்றார்.
மேலும், Science fiction படம் எடுப்பது மிக கடினமான ஒன்றாகும் அதிலும், ஒரு காதல் கதை கொண்டு படமாக்குவது என்பது ஆச்சரியமாக இருக்கிறது. மேலும், நான் 8 மாதங்களாக கதை எழுதி வருகிறேன் எனவும், இன்னும் அது 2 மாதங்கள் கூட போகலாம் என்றார். அதனால் தான் நான் படங்கள் பார்ப்பதில்லை என்று கூறினார்.
நான் பொறுக்கிபையன் என்று பேசியது, இப்போது அதை எல்லோரும் கிண்டல் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். நாங்கள் சண்டையிட்டுக் கொண்டோம், சண்டை போடாமல் இருக்க முடியாது எனவும், நடிகர் விஷால் என் மனதிற்கு நெருக்கமானவன். துரோகத்தை மறக்க மாட்டேன் என்று விஷால் கூறுகிறார். அப்படி நான் என்ன துரோகம் பண்ணினேன்? என்று தெரியவில்லை எனவும் கூறினார்.
நான் அவனை மிஸ் பண்ணுறேன் எனவும், அவனுக்கு அப்படி இருக்காது என்றும், விஷாலுக்கு ஈகோ அதிகம் எனவும், உடனே நான் அவனுக்கு சாதகமாக பேசுவதால் விஷாலுடன் படம் பண்ணுவேன் என்று நினைக்க வேண்டாம் அப்படி நடக்காது என்று கூறினார்.
சிறப்பு விருந்தினரான இயக்குநர் வெங்கட் பிரபு மேடையில் பேசுகையில், "உலக சினிமா வரலாற்றில் முதல் முறையாக நான் கெளதம் மேனனாக நடித்துள்ளேன் என்பது மிகவும் ஆச்சரியமாக உள்ளது. இதைப் பற்றிய விவரம் இன்னும் அவருக்கு தெரியாது. இந்த படத்தின் ட்ரெய்லர் பார்த்த பின்பு தெரிய வரும் என்றார். இதற்கு குரல் கொடுத்தவர் படத்தின் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் தான் என்றார். இந்த படப்பிடிப்பில் யோகன் படத்தின் போஸ்டரை பார்த்த பின் தான், விஜயை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது என்றார். மேலும், “வாத்தி” படத்தின் பாடல் ரிக்கார்டிங் நடக்கும் போது, “அடியே” படப்பிடிப்பில் பணியாற்றினார். ஒரே நேரத்தில் பல வேலைகள் பார்த்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ் குமார் என்று பாராட்டினார்.
பின்னர் செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த வெங்கட் பிரபு, "விஜய் 68 பட அப்டேட் குறித்து இப்பொழுது சொல்ல முடியாது. லியோ திரைப்படம் வெளிவந்த பிறகு அதன் அப்டேட் வரும். தற்போது ஃப்ரீ ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது. “தளபதி 68” படம் அரசியல் சார்ந்த படமாக இருக்காது எனவும், தளபதி 68 படம் கமிட் ஆனவுடன் முதலில் அஜித் குமார் தான் எனக்கு வாழ்த்து கூறினார் என்றார். மேலும், உங்கள் பட டைட்டிலில் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் என போடுவீர்களா? என்று கேட்டதற்கு நான் தளபதி என்று தான் போடுவேன்” என்று கூறினார்.
இதையும் படிங்க:ஜெயிலர் ரிலீஸில் அதிகாலை நேரக் காட்சிகள் இல்லை... பின்னணி என்ன?