ETV Bharat / state

நேதாஜி சிலை திறப்பு விழாவில் சாவர்க்கர் குறித்து பேசிய வெங்கையா நாயுடு

சென்னை: வரலாறு தெரியாதவர்கள் வீர் சாவர்க்கர் குறித்து தவறான தகவல்களை பரப்பிவருகின்றனர் என குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

Venkaiah Naidu latest
Venkaiah Naidu latest
author img

By

Published : Jan 24, 2020, 7:27 AM IST

சென்னை ஆளுநர் மாளிகையில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சிலையை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்துவைத்து, அவர் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், ஆளுனர் பன்வாரிலால் புரோகித், அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, "டிசம்பர் 30, 1943ஆம் ஆண்டு, அந்தமான் நிகோபார் தீவுகளில் ஐ.என்.ஏ. கொடியை ஏற்றி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்தியா சுதந்திரம் பெற்றதாக பிரகடனப்படுத்தினார். தமிழ்நாட்டிற்கும் சுபாஷ் சந்திர போஸிற்கும் நெருங்கிய தொடர்புகள் உள்ளன. குறிப்பாக பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சுபாஷ் சந்திர போஸுக்கு உறுதுணையாக இருந்தார்.

வீர் சாவர்க்கர் குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டுவருகின்றது. வரலாறு குறித்து தெரியாதவர்கள் இதுபோல தவறான தகவல்களை பரப்புகின்றனர். வீர் சவார்க்கர் உள்ளிட்ட ஏராளமான சுதந்திர போராட்ட வீரர்கள் அந்தமான் நிக்கோபர் சிறையில் கடுமையான அவதிக்குள்ளாகினர். மாணவர்கள், இளைஞர்கள், அரசியல்வாதிகள் ஆகியோர் அந்தமான் நிக்கோபர் சிறையைச் சென்று பார்க்க வேண்டும். அப்போதுதான் சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகமும் அர்ப்பணிப்பும் தெரியும்.

சுபாஷ் சந்திர போஸ் சிலையை திறந்து வைத்த வெங்கையா நாயுடு

தற்போதும் சமூக குற்றங்கள் நடக்கிறது. மக்கள் மனதை மாற்ற வேண்டும். மக்கள் மனங்களிலுள்ள சமூக பாகுபாட்டை மாற்ற வேணடும். இளைஞர்களை சரியான முறையில் நடத்தப்பட வேண்டும். இளைஞர்கள் எந்த பொது சொத்தையும் சேதப்படுத்தக்கூடாது. பொதுச்சொத்தை சேதப்படுத்துவது நாட்டையே சேதப்படுத்துவதற்கு சமமானது. வன்முறை எதற்கும் தீர்வாகாது" என்றார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, "நேதாஜி அதிக அளவில் மக்களை சுதந்திர போராட்டத்தில் பங்குபெறச்செய்தார். இந்திய நாட்டின் விடுதலைக்காக தனிமனிதனாக அவரது செயல்பாடுகளை பார்த்து மொத்த உலகமும் வியந்தது. நேதாஜியை போல் தன்னலம் கருதாது பொதுநலனுக்காக மக்கள் தங்களை நாட்டிற்கு அர்ப்பணிக்க வேண்டும்" என இளைஞர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு

நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பேசுகையில், "உலகம் முழுவதும் பயணம் செய்து இந்திய ராணுவத்தை முதலில் உருவாக்கியவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். அவர் இந்திய விடுதலை போராட்டத்திற்கான வேள்வித்தீயை வளர்த்தவர். பசும்பொன் தேவரை நேசித்து அவருடன் நல்ல நட்பு கொண்டிருந்தார்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: குலசேகரபட்டினத்தில் இஸ்ரோ ராக்கெட் ஏவுதளம் - ஆட்சியர் சந்தீப் நந்தூரி

Intro:Body:வரலாறு தெரியாதவர்கள் வீர சாவர்க்கர் குறித்து தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர் என குடியரசு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

சென்னை ஆளுநர் மாளிகையில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சிலையை குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்து, அவரது படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

நேதாஜியின் 124வது பிறந்தநாளை முன்னிட்டு நடந்த சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஆளுனர் பன்வாரிலால் புரோகித், அமைச்சர்கள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு, டிசம்பர் 30, 1943ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்றதாக அந்தமான் நிகோபார் தீவுகளில் போர்ட் பிளேயரில் ஐ.என்.ஏ., கொடியை ஏற்றி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்தியா சுதந்திரம் பெற்றதாக பிரகடனப்படுத்தினார். தமிழகத்திற்கும் சுபாஷ் சந்திர போஸிற்கும் நெருங்கிய தொடர்புகள் உள்ளன. குறிப்பாக பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சுபாஷ் சந்திர போஸுக்கு உறுதுணையாக இருந்தார்.

தமிழர்கள் தமிழகத்தில் மட்டுமின்றி சிங்கப்பூர் மலேசியா உள்ளிட்ட இடங்களிலும் ஐ.என்.ஏ.,வில் ஆர்வமுடன் இணைந்தனர். ஐ.என்.ஏ.,வில் பெண்கள் பிரிவில் தளபதியாக தமிழர் இருந்தார்.

வீர் சாவர்க்கர் குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றது. வரலாறு குறித்து தெரியாதவர்கள் அது போல் பரப்பி வருகின்றனர். வீர் சவார்க்கர் உள்ளிட்ட ஏராளமான சுதந்திர போராட்ட வீரர்கள் அந்தமான் நிக்கோபர் சிறையில் கடுமையான அவதிக்குள்ளாகினர். மாணவர்கள் இளைஞர்கள் அரசியல்வாதிகள் அந்த வரலாற்றை தெரிந்துகொள்ள வேண்டும். மாணவர்கள் இளைஞர்கள் குறிப்பாக அரசியல்வாதிகள் அந்தமான் நிக்கோபர் சிலையை சென்று பார்க்க வேண்டும். அப்போதுதான் சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகம் அர்ப்பணிப்பு தெரியவரும்.

தற்போதுள்ள சூழலில் இந்திய சுதந்திர வீரர்கள் குறித்து அவர்கள் நடத்திய போராட்டம் குறித்து மாணவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டியது முக்கியமானது.

தற்போதும் சமூக குற்றங்கள் நடக்கிறது. மக்கள் மனதை மாற்ற வேண்டும். மக்கள் மனங்களில் சமூக பாகுபாட்டை மாற்ற வேணடும். இளைஞர்களை சரியான முறையில் வழி நடத்த வேண்டும். இளைஞர்கள் எந்த பொது சொத்தையும் சேதப்படுத்தக்கூடாது. பொதுச்சொத்தை சேதப்படுத்துவது நாட்டையே சேதப்படுத்துவது சமமானது. எந்த செயலுக்கும் வன்முறை தீர்வாகாது. அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.

நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், நேதாஜி அதிக அளவில் மக்களை சுதந்திர போராட்டத்தில் பங்குபெறச்செய்ததாகவும்,இந்திய
நாட்டின் விடுதலைக்காக தனிமனிதனாக அவரது செயல்பாடுகளை பார்த்து மொத்த உலகமும் வியந்ததாக தெதிவித்தார். அனைத்து துறையிலும் இந்திய நாடு
முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருக்கிறது எனவும் கூறினார். மேலும், நேதாஜியை போல் தன்னலம் கருதாது பொதுநலனுக்காக தங்களை நாட்டிற்கு அர்ப்பணிக்க வேண்டும் என இளைஞர்களுக்கு முதல்வர் வேண்டுகோள் விடுத்தார்.

நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், உலகம் முழுவதும் பயணம் செய்து இந்திய ராணுவத்தை முதலில் உருவாக்கியவர். இந்திய விடுதலை போராட்டத்திற்கான வேள்வித்தீயை வளர்த்தவர் எனவும், பசும்பொன் தேவரை நேசித்து அவருடன் நல்ல நட்பு கொண்டிருந்தார் என தெரிவித்தார்.

தமிழக மக்கள் பாராட்டும் வகையில் தமிழக ஆளுனர் மாநிலம் முழுவதும் சுற்றிப்பயணம் மேற்கொண்டு தூய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்தி வருகிறார் என்றார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.