ETV Bharat / state

'திட்டமிட்டு தமிழின் மீது தொடர் தாக்குதல்' - கண்டித்த தமிழக வாழ்வுரிமைக் கட்சி! - political news update

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சிவில் நீதிபதிகளுக்கான தேர்வுக்கு தமிழ் தேவையில்லை என்று அறிவிப்பதா என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

Velmurugan-TVK -slams -TNPSC
author img

By

Published : Sep 24, 2019, 12:39 PM IST

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சிவில் நீதிபதிகளுக்கான தேர்வுக்கு, தமிழ் தெரியாதவர்களும் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களின் எதிர்ப்பையும், கண்டனங்களையும் பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில்,
"தமிழ்நாட்டில் சிவில் நீதிபதிகளாகப் பணியாற்ற வேண்டியவர்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தேர்வு செய்கிறது. இந்தாண்டிற்கான தேர்வு அறிவிப்பு கடந்த 9ஆம் தேதி வெளியானது. அதில் 176 நீதிபதிகளுக்கான தேர்வுக்கு, வரும் அக்டோபர் 9ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விண்ணப்பத்தில் மேற்கொண்டு ஒரு விதிமுறை சேர்க்கப்பட்டிருக்கிறது. அது "தமிழ் தெரியாதவர்களும் விண்ணப்பிக்கலாம். அவர்கள் பணியில் சேர்ந்து இரண்டு ஆண்டுகளில் ஓரளவு தமிழைக் கற்றுக் கொண்டால் போதும். அதாவது அரைகுறைத் தமிழே போதுமானது" என்பதுதான்.

இதில் முதன்மைக் கேள்வி,

தமிழ்நாடு பணியாளர் தேர்வாணைய (TNPSC) நடைமுறை மற்றும் சட்டதிட்டங்களையே அறியாதவர் எப்படி சட்ட நெறிமுறைகளைக் கையாளமுடியும்?

கீழ்நிலையில் உள்ள தனது பணியாளர்களுடன் தமிழ் தெரியாத நீதிபதி எப்படிப் பேசுவார்?

காவலர் ஆவணங்கள் அனைத்துமே தமிழில்தான் இருக்கும், தமிழ் தெரியாத நீதிபதி அதனை எப்படிப் புரிந்துகொள்வர்?

கீழ் நீதிமன்ற வழக்கு விவரங்களும் தமிழில் தான் இருக்கும் அதை எப்படிப் புரிந்துகொள்வர்?

தமிழ் என்று வரும்போது நியாயம், நீதி, நேர்மை, உண்மை, வரலாறு, மரபுகள், அறிவியல் அனைத்துமே பலியிடப்படுகின்றன என்பதுதான் உண்மை.
அறிவியல் வெளிச்சம் இண்டு இடுக்குகளில் எல்லாம் பரவும் இந்தக் காலத்தில், ஆர்எஸ்எஸ்-பாஜக-அதிமுகவின் இந்தக் கொடுங்கதை முடிவுக்கு வரும் நாள் வெகு தொலைவில் இல்லை. இதையே எச்சரிக்கையாகவும், கண்டனமாகவும் பதிவு செய்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி! " எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: புதிய தமிழகம் கட்சியினர் கொலை மிரட்டல் - முஸ்லிம் லீக் தலைவர் முஸ்தபா புகார்

Intro:Body:

திட்டமிட்டு தமிழின் மீது தொடர் தாக்குதல்!

அறிவியல் மற்றும் வரலாற்று மரபையே அழித்திடத் திட்டம்?

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சிவில் நீதிபதிகளுக்கான தேர்வுக்கே தமிழ் தேவையில்லை என்று அறிவிப்பதா?

தமிழக வாழ்வுரிமைக் கட்சி கண்டனம்!

தமிழ்நாட்டில் சிவில் நீதிபதிகளாகப் பணியாற்ற வேண்டியவர்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தேர்வு செய்கிறது. இந்த ஆண்டு (2019)க்கான தேர்வு அறிவிப்பு கடந்த 9ந் தேதி வெளியானது. அதில் 176 நீதிபதிகளுக்கான தேர்வுக்கு, வரும் அக்டோபர் 9ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று விண்ணப்பம் பெறப்பட்டு வருகிறது.

இந்த விண்ணப்பத்தில் மேற்கொண்டு ஒரு விதிமுறை சேர்க்கப்பட்டிருக்கிறது. அது "தமிழ் தெரியாதவர்களும் விண்ணப்பிக்கலாம். அவர்கள் பணியில் சேர்ந்து 2 ஆண்டுகளில் ஓரளவு தமிழைக் கற்றுக் கொண்டால் போதும். அதாவது அரைகுரைத் தமிழே போதுமானது" என்பதுதான்.

இதில் முதன்மைக் கேள்வி, தமிழ்நாடு பணியாளர் தேர்வாணைய (T.N.P.S.C) நடைமுறை மற்றும் சட்டதிட்டங்களுக்கே உட்படாதவர் அதாவது அதனையே அறியாதவர் எப்படி சட்ட நெறிக்முறைகளைக் கையாளமுடியும்?

கீழ்நிலையில் உள்ள தனது பணியாளர்களுடன் தமிழ் தெரியாத நீதிபதி எப்படிப் பேசுவார்?

காவலர் ஆவணங்கள் அனைத்துமே தமிழில்தான் இருக்கும்; தமிழ் தெரியாத நீதிபதி அதனை எப்படிப் புரிந்துகொள்வர்?

கீழ்க் கோர்ட் வழக்கு விவரங்களும் தமிழில்தான் இருக்கும்  அதை எப்படிப் புரிந்துகொள்வர்?

மேலும், தேர்விலேயே தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கும் ஒரு பகுதி உண்டு. அது இத்தனை காலமும் மீறப்பட்டு வந்திருக்கிறது என்பதுதானே உண்மை. அதனால்தான் T.N.P.S.C  செயலாளராக இருக்கும் கே.நந்தகுமாரி, "சிவில் நீதிபதிகளுக்கான இந்த T.N.P.S.C தேர்வு விதிமுறைகள் அரசமைப்புச் சட்டப்படியானதே. இதைத் தமிழக அரசோ, தேர்வாணையமோ மாற்றமுடியாது. எந்த மாநிலத்தவர் வேண்டுமானாலும் இந்தத் தேர்வை எழுத்துவதைத் தடுக்க முடியாது" என்கிறார்.

ஒரு பொறுப்பில் இருப்பவர் தன் அமைப்பில் உள்ள குறைகளை, தவறுகளைக் களைவதுதானே நேர்மையான அதிகாரிக்கு அடையாளம். ஆனால் கே.சாந்தகுமாரிக்கோ தன் "பொறுப்பு" முக்கியமாகப் படவில்லை; பதவியில் ஒட்டி "இருப்பு" தான் முக்கியமாகப் பட்டிருக்கிறது போலும். அதனால்தான் மக்கள் நலனை, நியாயத்தை மறுக்கிறார்.

ஆனால் இதற்கு பார்கவுன்சிலும், வக்கீல் சங்கமும் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன. அவர்கள் இந்தப் பிரச்சனையை விடுவதாயில்லை. சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி அவர்களின் கவனத்திற்கே கொண்டுசென்று முறையிட இருந்தார்கள். ஆனால் தஹில் ரமானியால் இப்பிரச்சனைக்குத் தீர்வு கிடைத்துவிடும் என்று நினைத்த ஆளும் அதிகாரவர்க்கத்தினர் எப்போதும்போல் வழக்கமான தங்கள் சூழ்ச்சி, வஞ்சகம், கயமையைப் பயன்படுத்தினர். அதன்படி உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள் குழு, தஹில் ரமானியை மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற பரிந்துரைத்தது.

தவறேதும் செய்யாத தஹில் ரமானிக்குத் தண்டனை! இந்த மற்றல் உத்தரவை மறுபரிசீலனை செய்யும்படி கேட்டுக்கொண்டார் தஹில் ரமானி. ஆனால் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தஹில் ரமானி தன் பதவியையே ராஜினாமா செய்துவிட்டார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தும் அதை ஏற்றுக்கொண்டுவிட்டார்.

தமிழ் என்று வரும்போது நியாயம், நீதி, நேர்மை, உண்மை, வரலாறு, மரபுகள், அறிவியல் அனைத்துமே பலியிடப்படுகின்றன என்பதுதான் உண்மை. அறிவியல் வெளிச்சத்தில் தீய்ந்து சவமாய்க் காட்சியளிக்கும் மனுசாத்திர, வருணபேத, சனாதனத்திற்குத்தான் இந்தப் பலி படையலாகிறது. சவத்திற்கும் சாவுமணி அடித்து அதையே கொண்டாட்டம் மற்றும் கோட்பாடாக்கி பூஜிக்கும் மற்றும் பின்பற்றும் கற்கால கும்பல் இன்னும் இருக்கிறார்கள். அவர்களால்தான் ஆர்எஸ்எஸ்-பாஜக-அதிமுக கதை ஓடுகிறது.

அறிவியல் வெளிச்சம் இண்டு இடுக்குகளில் எல்லாம் பரவும் இந்தக் காலத்தில், ஆர்எஸ்எஸ்-பாஜக-அதிமுகவின் இந்தக் கொடுங்கதை முடிவுக்கு வரும் நாள் வெகு தொலைவில் இல்லை. இதையே எச்சரிக்கையாகவும், கண்டனமாகவும் பதிவு செய்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி! 

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.