தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாஹூ தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், வேலூர் தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் முடிவடைந்தது, இதன்பிறகு பரப்புரை உள்ளிட்டவற்றை மேற்கொள்ளக் கூடாது என்று தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் தகுந்த ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட 3 கோடியே 57 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், 89 லட்சம் ரூபாய் மதிப்பிலான 2.89 கிலோ தங்கமும், 5.7 லட்சம் மதிப்பிலான 13.8 கிலோ வெள்ளியும், 23 ஆயிரத்து 350 லிட்டர் மதுபானம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியை பொறுத்தவரை தொகுதி முழுவதும் 3,957 காவலர்கள், 1,600 மத்திய ஆயுதப்படை காவலர்கள், 400 ஊர் காவல் படையினர் பாதுகாப்பு பணிக்காக பயன்படுத்தப்படவுள்ளனர் என்று தெரிவித்தார்.