ETV Bharat / state

ஊரடங்கில் பறிமுதல் செய்த வாகனங்களை ஒப்படைக்கும் காவல் துறையினர் - பறிமுதல் செய்த வாகனங்களை ஒப்படைக்கும் போலீஸ்

சென்னை: முழு ஊரடங்கு அமலில் இருந்தபோது உத்தரவை மீறியவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை உரிய நபர்களிடம் காவல் துறையினர் ஒப்படைத்து வருகின்றனர்.

vehicles ceased during lockdown returned to people in chennai

author img

By

Published : Jul 6, 2020, 3:35 PM IST

சென்னையில் கடந்த மாதம் 19ஆம் தேதி முதல் நேற்று (ஜுன் 5) வரை முழு ஊரடங்கானது பின்பற்றப்பட்டது. இந்த ஊரடங்கை மீறி அநாவசியமாக வெளியே சுற்றியதாக 88,360 வாகனங்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்த வாகனங்களை அந்தந்த காவல் நிலையங்களுக்கு உட்பட்ட இடங்களில் ஊரடங்கு முடிந்த பிறகு உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என காவல் துறையினர் தெரிவித்திருந்தனர்.

அதன் அடிப்படையில் இன்று பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஒப்படைக்கும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டுவருகின்றனர். குறிப்பாக காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 7 மணி வரையிலும் அந்தந்த காவல் நிலையங்களுக்கு உட்பட்ட இடங்களில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை உரியவர்கள் பெற்றுக்கொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளனர்.

காவல் துறையினர் விதித்த அபராதத் தொகையை ஆன்லைன் மூலம் செலுத்திவிட்டு ஆதார் கார்டு, வாகன உரிம அட்டையை காண்பித்துவிட்டு வாகனங்களை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வாகனங்களைப் பெற்றுக்கொள்ள வருபவர்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் எனக் கூறியும், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதற்காக வட்டம் வரைந்தும் காவல்துறையினர் நிற்க வைத்துள்ளனர்.

vehicles ceased during lockdown returned to people in chennai
பறிமுதல் செய்த வாகனங்களை ஒப்படைக்கும் காவல்துறையினர்

வாகனங்கள் டோக்கன் முறையிலும் கொடுக்கப்பட்டுவருகின்றன. மேலும் வாகனங்களை பெற்றுக்கொள்ள வரும் நபர்கள் மீண்டும் ஊரடங்கை மீறிச் சென்றால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றம் மூலமே பெறமுடியும் என உறுதி மொழி படிவத்தில் காவல் துறையினர் கையெழுத்து வாங்கி அதன் பிறகே வாகனங்களை கொடுத்துவருகின்றனர்.

குறிப்பாக அண்ணா நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இடங்களில் மட்டும் சுமார் 467 இருசக்கர வாகனங்கள், 75 கார்களை அண்ணா நகர் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

இதையும் படிங்க... 'என் வண்டியைத் திருடுனது இவர்தாங்க...' - திருடியவரை போலீசிடம் ஒப்படைத்த பாதிக்கப்பட்டவர்!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.