தமிழ்நாடு முழுவதும் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, நடமாடும் வாகனங்களில் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
அந்தவகையில், சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள 200 வார்டுகளிலும், இரண்டாயிரம் வாகனங்கள் மூலம் காய்கறி, பழங்கள் போன்ற அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை செய்ப்படுகின்றன.
இந்த நடமாடும் காய்கறி விற்பனையில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், பெருநகர சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு 044-45680200 என்ற தொலைப்பேசி மற்றும் 94999 32899 என்ற கைப்பேசி எண் மூலம் தகவல் தெரிவிக்கலாம் எனச் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் 3 சக்கர வாகனங்கள், தள்ளு வண்டிகள் மூலம் காய்கனிகள் விற்பனை செய்பவர்களின் விபரங்களை chennaicorporation.gov.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.