ETV Bharat / state

வேதா இல்லம் வழக்கில் மேல்முறையீடு செய்யவில்லை – தமிழ்நாடு அரசு - வேதா இல்லம் மேல்முறையீடு செய்யவில்லை

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவில்லமாக மாற்ற வேண்டிய அவசியமில்லை என ஏற்கனவே அமர்வு நீதிமன்றமும், தனி நீதிபதியும் உத்தரவிட்டதால் அரசு சார்பில் மேல்முறையீடு செய்யவில்லை என்று தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு பதில்
தமிழ்நாடு அரசு பதில்
author img

By

Published : Dec 20, 2021, 6:17 PM IST

சென்னை: ஜெயலலிதாவின் வேதா நிலையம் நினைவில்லமாக மாற்றும் வகையில், கையகப்படுத்திய உத்தரவுகளை ரத்துசெய்ததை எதிர்த்து மேல்முறையீடு தாக்கல்செய்ய அதிமுகவிற்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலையம் இல்லத்தை, நினைவு இல்லமாக மாற்றுவது தொடர்பாக முந்தைய அதிமுக அரசு, அறிவித்ததை ரத்துசெய்யக் கோரி ஜெயலலிதாவின் வாரிசுகளாக அறிவிக்கப்பட்ட தீபா, தீபக் தரப்பில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி சேஷசாயி, நினைவு இல்லம் அமைப்பதில் எந்தப் பொது பயன்பாடும் இல்லை என்றும், ஏற்கனவே நினைவிடம் உள்ள நிலையில் நினைவில்லம் அமைப்பது அரசு பணத்தை வீணடிக்கும் செயல் என்றும் கூறி, வேதா நிலையத்தை கையகப்படுத்திய நடவடிக்கைகளை ரத்துசெய்து நவம்பர் 24ஆம் தேதி தீர்ப்பளித்தார்.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரி, அதிமுக வழிகாட்டுதல் குழு உறுப்பினரும், ஜெயலலிதா நினைவு இல்ல அறக்கட்டளை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.வி. சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்துள்ளார். அதேபோல், உயர் நீதிமன்ற தீர்ப்பை ரத்துசெய்யக் கோரியும் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

வேதா நிலையம் கையகப்படுத்திய உத்தரவை ரத்துசெய்யப்பட்டதை எதிர்த்து மாநில அரசு மேல்முறையீடு செய்ய அக்கறை காட்டாததால், அறக்கட்டளை உறுப்பினர் என்ற முறையில் மேல்முறையீடு செய்ய உரிமை உள்ளதாகவும், அதனால் மேல்முறையீடு செய்ய அனுமதி வழங்க வேண்டும் எனக் கோரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் பரேஷ் உபத்தாயா, சத்திகுமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், அதிமுக சார்பில் மேல்முறையீடு மனு தாக்கல்செய்ய அனுமதி அளித்து உத்தரவிட்டனர். அதன்படி, இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சி.வி. சண்முகம் சார்பில் மூத்த வழக்கறிஞர் சோமையாஜி ஆஜராகி, தனி நீதிபதி வழக்கைத் தவறாக அணுகியுள்ளார் என்றும் பொதுமக்கள் பயன்பாடு என்பதை அரசுதான் முடிவு செய்ய வேண்டும் நீதிமன்றம் அல்ல என்று குறிப்பிட்டார்.

மற்ற தலைவர்களோடு ஒப்பிட்டு அளவுகோலைப் பயன்படுத்தியிருப்பது அதிகாரவரம்பிற்கு அப்பாற்பட்டது என்றும், ஜெயலலிதா ஆறு முறை முதலமைச்சராக இருந்து பல்வேறு மக்கள் நலத்திட்டங்களைக் கொண்டுவந்தவர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ராஜாஜி, காமராஜர் உள்ளிட்ட தலைவர்களுக்கு நினைவிடம், சிலை, வாழ்ந்த இல்லம் நினைவிடமாக மாற்றப்பட்டது எனப் பல இடங்கள் உள்ளதாகவும் எனவே ஜெயலலிதாவுக்கு ஒரு நினைவிடம் போதும் என நீதிமன்றம் சொல்ல முடியாது என வாதிட்டார்.

தீபக் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல். சுந்தரேசன் ஆஜராகி, இந்த வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது மனுதாரர் இந்த வழக்கில் தன்னையும் இணைத்து வாதிடவில்லை என்றும், சாவிகள் ஒப்படைக்கப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்தார்.

அரசுத் தரப்பில் தலைமை வழக்கறிஞர் ஆர். சண்முகசுந்தரம் ஆஜராகி, ஏற்கனவே நீதிபதிகள் கிருபாகரன், அப்துல் குத்தூஸ் தலைமையிலான அமர்வு, ஜெயலலிதாவின் சொத்துகளில் ஒரு பகுதியில் அறக்கட்டளை அமைக்க வேண்டும் எனவும், எட்டு வாரங்களில் தமிழ்நாடு அரசு இது குறித்து அறிக்கைத் தாக்கல்செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.

மேலும், வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற அவசியமில்லை, ஜெயலலிதா இல்லத்தின் ஒரு பகுதியை வேண்டுமானால் நினைவிடமாக்கலாம் எனவும், மற்றபடி அவரின் இல்லத்தை முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ அலுவலகமாக மாற்றலாம் என்றும் அரசுக்குப் பரிந்துரை செய்திருந்தனர் என்று சுட்டிக்காட்டினார்.

மேலும், நீதிபதி சேஷசாயி, வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்றக் கூடாது என்று உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவுகளைப் பரிசீலித்ததன் அடிப்படையிலேயே தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்யவில்லை, சாவியும் தீபக், தீபாவிடம் ஒப்படைக்கப்பட்டது என்று விளக்கம் அளித்தார். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: மேற்கூரை பெயர்ந்து ஆபத்தான நிலையில் அரசுப் பள்ளிக் கட்டடம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.