இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "சாத்தான்குளம் இரட்டைக் கொலையில் நேர்மைத் திறத்துடன் சாட்சியமளித்த தலைமைக் காவலர் ரேவதிக்கு உரிய பாதுகாப்புத் தேவை. அரச வன்கொடுமைக்கு எதிராக நீதிக்குரல் எழுப்பியுள்ள ரேவதி அவர்களை விசிக சார்பில் நெஞ்சாரப் பாராட்டுகிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, இந்திய அளவில் கவனிக்கப்படும் சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு குறித்து அதற்கு காரணமாணவர்கள் மீது நடவடிக்கைகள் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழ்நாடு முழுமையாக போராட்டங்கள் நடைபெற்றது. இதையடுத்து திருமாவளவன் ட்விட்டரில் இந்த விவகாரம் தொடர்பாக முக்கிய சாட்சி அளித்த பெண் காவலருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: கர்ப்பிணியை கொன்ற காவலர்களுக்கு என்ன தண்டனை கிடைத்தது - ஓய்வுபெற்ற நீதிபதி அரி பரந்தாமன் கேள்வி