விசிக பொதுச்செயலாளரும், விழுப்புரம் மக்களவை உறுப்பினருமான ரவிக்குமார் பதிவிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ”திமுக தலைவர் ஸ்டாலினின் இல்லத்திலிருந்து ஃபோன் வந்தது. தலைவர் பேசுகிறார் என இணைப்பைக் கொடுத்தனர். 'நல்லா இருக்கீங்களா?' என்று வழக்கமான வாஞ்சையோடு கேட்டவர் 'திருமா எங்கே இருக்கிறார்?
அவர் நம்பரை டிரை பண்ணினேன் ஸ்விட்ச் ஆஃப் ஆகியிருக்கு' என்றார். கரோனா தொற்றில் சிக்கிக்கொள்ளாமல் கவனமாக இருங்கள். நலம் விசாரிப்பதற்காகத்தான் ஃபோன் செய்தேன்' என்றார்.
தலைவரிடம் இந்தத் தகவலைக் கூறியதும் அவரே ஃபோன் செய்து அண்ணனிடம் நலம் விசாரித்தார். கரோனா அச்சத்தில் எல்லோரும் மனம் கலங்கி இருக்கும்போது ஸ்டாலினின் அன்பான விசாரிப்பு தெம்பு தந்தது. அவருக்கு என் நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கரோனா: ஊடகவியலாளர்களுக்கு முகக்கவசம் வழங்கிய ஸ்டாலின்