ETV Bharat / state

அண்ணாமலை மீது விசிக வழக்கு... விசாரணைக்கு ஏற்பு - பறையர்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடவேண்டும் என்று விசிக சார்பில் தொடரப்பட்ட மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.

அண்ணாமலை மீது விசிக வழக்கு... விசாரணைக்கு ஏற்பு

author img

By

Published : Nov 4, 2022, 6:54 AM IST

Updated : Nov 4, 2022, 7:00 AM IST

பிரதமராக மோடி பதவியேற்ற 8 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு தமிழக பாஜக மாநில தலைவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்தார். அதில் பறையரிலிருந்து விஷ்வ குருவாக உயர்ந்தவர் என அண்ணாமலை குறிப்பிட்டிருந்தார்.

பறையர் என்ற சொல்லை அவர் பயன்படுத்தியதற்கு விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில், சென்னை காவல்துறை ஆணையரிடம் அண்ணாமலைக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புகார் கொடுக்கப்பட்டது.

அதில், தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது பதிவால் சாதி மத கலவரத்தை தூண்டும் வகையில் செயல்பட்டு வருவதாகவும், அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

ஆனால் காவல்துறை வழக்கு பதிவு செய்யவில்லை எனக் கூறி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வழக்கறிஞர் காசி என்பவர் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில் பாஜக தலைவர் அண்ணாமலை மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளார். இந்த மனு மீதான உத்தரவு வரும் 7 ம் தேதி பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : விசிக பெண் கவுன்சிலரை கம்பியால் தாக்க வந்த திமுக நிர்வாகி; வீடியோ வைரல்

Last Updated : Nov 4, 2022, 7:00 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.