ETV Bharat / state

சாதி ரீதியாக பேசிய பேராசிரியை மீது விசிக மீண்டும் புகார் - சாதி ரீதியாக பேசிய பேராசிரியை

மாணவர்களிடம் சாதி ரீதியாக பேசிய பச்சையப்பன் கல்லூரி பேராசிரியை மீது எஸ்.சி/ எஸ்.டி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மீண்டும் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

விசிக மீண்டும் புகார்
விசிக மீண்டும் புகார்
author img

By

Published : Aug 26, 2022, 7:25 PM IST

சென்னை: பச்சையப்பன் கல்லூரி பேராசிரியரான அனுராதா, அதே துறையை சேர்ந்த மாணவரிடம் சாதி ரீதியாக பேசிய உரையாடல் சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. பேராசிரியர் அனுராதாவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என விசிக சார்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த வாரம் புகார் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக கல்லூரி நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கை குழு மூலம் விசாரணை நடத்தி பச்சையப்பன் கல்வி அறக்கட்டளையின் செயலாளர் துரைசாமி, தமிழ் துறை தலைவர் அனுராதா ஆகிய இரண்டு பேரை 2 மாதம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது.

விசிக மீண்டும் புகார்

இந்த நிலையில் பேராசிரியர் அனுராதாவை எஸ்.சி/ எஸ்.டி பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மீண்டும் விடுதலை சிறுத்தைகள் கட்சி மய்ய சென்னை மாவட்ட செயலாளர் இரா.செல்வம் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாணவனிடம் சாதி ரீதியாக பேசிய பேராசிரியர் அனுராதா மீது இதுவரை காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் உடனடியாக எஸ்.சி/ எஸ்.டி சட்டப்பிரிவுகளின் கீழ் கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்ததாக அவர் கூறினார்.

சென்னை காவல்துறை இந்த விவகாரத்தில் மெத்தனம் காட்டாமல் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார். கல்லூரி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களிடம் சாதி ரீதியாக பேசுவதை தடுக்க உயர்கல்வி மற்றும் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என அவர் கூறினார்.

இதையும் படிங்க: சென்னையில் திடீா் மழையால் விமான சேவைப்பாதிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.