இந்த விசாரணைக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய வன்னி அரசு, ”இலங்கையில் 2009ஆம் ஆண்டே விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுற்ற நிலையில் தற்போது விடுதலைப் புலிகளுக்கும் எங்களுக்கும் தொடர்புள்ளது என்ற கோணத்தில் விசாரணைக்காக என்னை அழைத்திருந்தனர்.
விசாரணையின்போது விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த பெண் ஒருவர் சமீபத்தில் எங்களை தொடர்பு கொண்டதாகவும், அப்பெண்ணுடனான தொடர்பு குறித்தும் பல கேள்விகளை எழுப்பினர்.
இலங்கையில் நடைபெற்ற போரில் விடுதலைப் புலிகள் முற்றிலுமாக அழிந்துவிட்டதாக கூறிவரும் நிலையில் தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியையும் விடுதலை புலிகளையும் சம்பந்தப்படுத்தி விசாரணை செய்வது எந்த வகையில் நியாயம்? என தழ்நாடு அரசு தெளிவுபடுத்த வேண்டும்.
இதனை சட்டரீதியாக விடுதலை சிறுத்தைகள் கட்சி எதிர் கொள்ளும்’ என்றார்.