ETV Bharat / state

சிங்காரச் சென்னை திட்டம் என்ன ஆனது? விடிவுகாலம் எப்போது? - வானதி சீனிவாசன் அறிக்கை..! - கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர்

Vanathi Srinivasan press release: கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளம்பரம் தேடாமல் மக்களின் இயல்பு நிலை திரும்பப் போர்க்கால நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

வானதி சீனிவாசன் அறிக்கை
vanathi srinivasan press release
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 5, 2023, 5:10 PM IST

Updated : Dec 5, 2023, 5:36 PM IST

கோயம்புத்தூர்: பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அந்த அறிக்கையில், “மிக்ஜாம் புயலின் கோரத்தாண்டவத்தால் சென்னை நகரமே கடுமையான பாதிப்பிற்குள்ளாகி உள்ளது. ரூ.4000 கோடி பணிகளால் தான் பாதிப்பு குறைவு என மீண்டும் விளம்பரத்தில் இறங்கியுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.

கடந்த 2015ஆம் ஆண்டு 28 முதல் 34 சென்டிமீட்டர் மழை பெய்தது. தற்போது பெருங்குடியில் மிக அதிகமாக 45 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. ஆனால் சென்னை முழுவதும் பரவலாக 20 முதல் 30 சென்டிமீட்டர் மழைப் பதிவாகியுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டை விடப் பாதிப்பு அதிகம். அப்படி இருக்கையில் ரூ.4000 கோடி பணிகளால் தான் பாதிப்பு குறைவு எனக் கூறுவது எப்படி?

  • முதல்வர் ஸ்டாலின் அவர்களே விளம்பரம் தேடாமல் மக்களின் இயல்பு நிலை திரும்ப போர்க்கால நடவடிக்கைகளை தீவிரப்படுத்துங்கள்.

    மிக்ஜாம் புயலின் கோரத்தாண்டவத்தால் சென்னை நகரமே கடுமையான பதிப்பிற்குள்ளாகியுள்ளது.
    4000 கோடி பணிகளால் தான் பாதிப்பு குறைவு என மீண்டும் விளம்பரத்தில்… pic.twitter.com/9w70zIChaZ

    — Vanathi Srinivasan (@VanathiBJP) December 5, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

கடந்த 2021 ஆம் ஆண்டு சென்னையில் பெருமழை பெய்தபோதும் முந்தைய அரசைக் குறை கூறினார். தற்போதும் இதே பதிலைத் தான் கூறுகிறார். கடந்த 27 வருடத்திற்கு முன்னர் 1996 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சிங்காரச் சென்னை திட்டம் என்ன ஆனது. அதன் பின், கிட்டத்தட்ட 12 வருடங்கள் திமுக ஆட்சியிலிருந்தது. தற்போதும் ஆட்சியில் உள்ளது. இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்.

கடந்த 1967 ஆம் ஆண்டு கூவம் சுத்தம் செய்யப்போவதாகக் கூறி ஒரு திட்டத்தை அறிவித்தார் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி. சுத்தம் செய்யும் வேலை எப்போது நிறைவடையும் என்று சட்டசபையில் கேள்வி கேட்ட போது மூன்று நாட்கள் கழித்து அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி கூவத்தில் சுத்தம் செய்யும் வேலையை நிறுத்தப்போவதாகக் கூறினார். அதற்குக் காரணமாக, கூவத்தில் முதலை இருக்கிறது எனக் கூறினார். திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட மூன்று கோடி முதற்கட்ட பணிக்கே செலவானது எனவும் கூறினார்.

கடந்த 50 ஆண்டுகளாகக் கூவத்தைச் சுத்தம் செய்யவில்லை. கடந்த மாதமும் சென்னையில் உள்ள ஆறுகளைச் சுத்தம் செய்யும் பொருட்டு, சென்னையில் நதிகளை மொத்தமாக மாற்றும் நிறுவனம் எனப்படும் Chennai Rivers Transformation Company என்ற புதிய நிறுவனத்தைத் தமிழ்நாடு அரசு உருவாக்கி உள்ளது.

திமுக ஆட்சி வரும்போது எல்லாம் கூவம் சுத்தம் செய்யப்படும் என்ற அறிவிப்பும், நிதி ஒதுக்கீடும் அறிவிக்கப்படும் ஆனால் கூவம் சுத்தமாகவில்லை. சென்னையும் சிங்காரச் சென்னை ஆகவில்லை. எப்போதுதான் சென்னைக்கு விடிவுகாலம் பிறக்கும்.

சிங்காரச் சென்னை திட்டத்திற்கு ஒதுக்கிய நிதி குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடத் தயாராக உள்ளாரா முதலமைச்சர் ஸ்டாலின்? இல்லை, இதுவரை திமுக ஆட்சியில் ஆறுகளைத் தூர்வாரவும், கூவத்தைச் சுத்தப்படுத்தவும் ஒதுக்கியுள்ள நிதிகள் குறித்து வெள்ளை அறிக்கை விடத் தயாரா? இவ்வாறு கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

அரசியல் விளம்பரம் தேடாமல் தற்போது உள்ள சூழ்நிலையினைக் கருத்தில் கொண்டு புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதைச் சீரமைக்க நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துங்கள். விளம்பரம் தேடாமல் வெள்ளத்தில் சிக்கி முடங்கியிருக்கும் மக்களின் இயல்புநிலை திரும்ப நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்” என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

Last Updated : Dec 5, 2023, 5:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.