ETV Bharat / state

'மேட்டுப்பாளையம் சம்பவத்தில் திட்டமிட்டு சாதிச்சாயம் பூசப்படுகிறது' - வானதி ஸ்ரீனிவாசன்! - mettupalayam wall issue lattest news

சென்னை: மேட்டுப்பாளையம் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்த சம்பவத்தில் வேண்டுமென்றே சாதிச்சாயம் பூசப்படுகிறது என்று வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.

மேட்டுப்பாளையம் தீண்டாமைச் சுவர் பிரச்னை  மேட்டுப்பாளையம் சுவர் பாஜக கருத்து  வானதி ஸ்ரீனிவாசன்  mettupalayam wall issue  mettupalayam wall issue lattest news  vanathi srinivasan comment on mettupalayam wall issue
மேட்டுப்பாளையம் சம்பவத்தில் திட்டமிட்டு சாதிச்சாயம் பூசுப்படுகிறது - வானதி ஸ்ரீனிவாசன்
author img

By

Published : Dec 4, 2019, 11:50 PM IST

சென்னை தி.நகர் கமலாலயத்தில் பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி தங்களை பாஜகவில் இணைத்துக் கொள்ளும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்விற்குப் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய வானதி ஸ்ரீனிவாசன், 'பாஜகவிற்கு மாநிலத்தலைவர் இல்லையென்றாலும், தேசிய தலைவராக பிரதமர் மோடி உள்ளார். மாநில தலைவர் இல்லை என்பதால், எந்தப் பணியும் பாதிக்கப்படவில்லை.

உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும். உள்ளாட்சித் தேர்தல் விவகாரத்தை நீதிமன்றத்திற்கு எடுத்துச்சென்று திமுக மேலும் சிக்கல் ஆக்காமல் இருக்க வேண்டும். உள்ளாட்சித்தேர்தல் முடிந்தால் தான் மத்திய அரசிடம் இருந்து உள்ளாட்சிகளில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு முழுமையான நிதியைப் பெறமுடியும்.

மேட்டுப்பாளையம் சம்பவத்தில் திட்டமிட்டு சாதிச்சாயம் பூசுப்படுகிறது - வானதி ஸ்ரீனிவாசன்

பாஜகவைப் பொறுத்தவரை உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து தொகுதிகளில் போட்டியிடுவதற்கான பலம் உள்ளது. தற்போது, எந்த எந்த தொகுதிகளில் யார் பலம்பெற்றவர்கள் யாருக்கு தொகுதியில் செல்வாக்கு இருக்கிறது என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

மேட்டுப்பாளையம் சுவர் இடிந்து விழுந்த சம்பவத்தில் எங்கே தீண்டாமை இருந்தது. தீண்டாமை என்கிற வார்த்தையை இவர்கள் எங்கிருந்து பிடித்தார்கள். எல்லா விசயங்களுக்கும் சிலரால் திட்டமிட்டு சாதிச்சாயம் பூசப்படுகிறது" என்றார்.

இதையும் படிங்க: 'வைகோ மட்டும் தான் தமிழ்நாட்டின் ஆளுமைமிக்க அரசியல்வாதி' - அமைச்சர் செல்லூர் ராஜூ

Intro:Body:

சென்னை தி.நகர் கமலாலயத்தில் பல்வேறு மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் காங்கிரஸ்  கட்சியில் இருந்து விலகி தங்களை பிஜேபி கட்சியில் இணையும் நிகழ்வு நடைப்பெற்றது. 

அதன் பின் பிஜேபி மாநில பொதுச்செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், மாநில தலைவர் இல்லையென்றாலும் தேசிய தலைவராக பிரதமர் மோடி உள்ளார். மாநில தலைவர் இல்லை என்பதால் எந்த பணியும் பாதிக்கப்படவில்லை. 

உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும். மேலும் உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தை நீதிமன்றம் சென்று திமுக மேலும் மேலும் சிக்கலுக்காமால் இருக்க வேண்டும். ஏற்கனவே உள்ளாட்சி தேர்தல் காலத்தை கடந்து உள்ளது..மத்திய அரசு நிதி உதவியை உள்ளாட்சி தேர்தலை முழுமையாக பெற முடியும். இதை எல்லாம் புரிந்து கொண்டு உள்ளாட்சி தேர்தலுக்கு திமுக தயாராக வேண்டும். நீதிமன்றம் செல்வதால் திமுகவிற்கு தேர்தலை சந்திப்பதில் தயக்கம், பயம் இருப்பது போல் தெரிகிறது என தெரிவித்தார்.

பிஜேபி பொருத்தவரை உள்ளாட்சி தேர்தலில் எல்லா மாவட்டத்திலும் எந்த தொகுதியில் யார் பலம் போன்றவை ஆலோசித்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. 

தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில், நீதிமன்றத்தில் ஒவ்வொரு வழக்குக்கும் ஒவ்வொரு தன்மை இருக்கிறது என தெரிவித்த அவர்,  சிதம்பரம் முன்னாள் நிதியமைச்சர் ஒரு மதிப்புமிக்க காங்கிரஸ் தலைவர் என்கின்ற காரணத்தினால் மட்டுமே நீதி காலதாமதமாக வழங்கப்பட்டது என்பது அல்ல என காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்தார். மேலும் அந்த வழக்கில் அவர் குற்றம் சாட்டப்பட்ட நபர் அவருக்கு எதிராக எம்மாதிரியான விசாரணை நடைபெறுகிறது,  ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது, அவர் வெளியே வரக் கூடிய தன்மை  இருக்கின்றதா என்பதை நீதிமன்றம் ஆராய்ந்து பார்த்துதான் இந்த பைல் கொடுத்துள்ளனர் என தெரிவித்தார்.

மேலும் மேட்டுப்பாளையம் சம்பவம் திட்டமிட்டு சிலரால் சாதி சாயம் பூசப்படுகிறது என குற்றம்சாட்டினர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.